வாரணாசி படத்தின் பட்ஜெட் இவ்வளவு கோடியா? அடேங்கப்பா
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ், பிரியங்கா சோப்ரா மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் இணைந்து நடித்து உருவாகி வரும் படம் வாரணாசி. இந்திய சினிமாவே இப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக ரூ. 25 கோடி செலவு செய்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்திய சினிமாவின் பெருமைக்கூறிய படமாக உருவாகி வரும் வாரணாசியின் மொத்த பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தை ரூ. 1,200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு ஆகிய இருவரும் சம்பளம் வாங்கவில்லையாம்.
படத்தின் லாபத்தில் இருந்து பங்கு பெற்றுக்கொள்வார்கள் என்கின்றனர். ஆனால், இந்த பட்ஜெட் குறித்து வெளிவந்துள்ள தகவல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.