கன்னட சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் 5 நடிகைகள்!! யார் நம்பர் 1 தெரியுமா?
சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் தனக்கான ஒரு இடத்தினை பிடிப்பதற்காக கடினமாக உழைத்து முன்னேறுவதுண்டு. அப்படி தன்னுடைய திறமையால், டாப் நடிகையாக மாறி தன்னுடைய மார்க்கெட்டையும் சம்பளத்தையும் உயர்த்துவார்கள். அப்படி கன்னட சினிமாத்துறையில் நடித்த நடிகைகளில் யார் அதிக சம்பளம் பெற்று வருகிறார்கள் என்ற டாப் 5 லிஸ்ட் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா மந்தனா
கிரிக் பார்ட்டி என்ற படத்தில் கன்னட சினிமாத்துறையில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தான் முதல் இடத்தில் இருக்கிறார். ஒரு படத்திற்காக 5 முதல் 6 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறாரார் ராஷ்மிகா.

ஸ்ரீநிதி ஷெட்டி
கேஜிஎஃப் படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, தற்போது தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்திற்காக அவர் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார்.

ரச்சிதா ராம்
கன்னட சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை என்று கூறப்படும் நடிகை ரச்சிதா ராம் ஒரு படத்திற்காக 4 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார். ரஜினிகாந்தின் கூலி படத்தில் வில்லியாக நடித்து மிகப்பெரியளவில் பேசப்பட்டார்.
ஆஷிகா ரங்கநாத்
கன்னடம், தெலுங்கு மொழிகளில் நடித்து தன்னுடைய அழகு மற்றும் நடிப்பால் நடிகை ஆஷிகா ரங்கநாத், ஒரு படத்திற்காக ரூ. 3 கோடி சம்பளம் பெறுகிறார்.

ஷான்வி ஸ்ரீவஸ்தவா
ஸ்ரீமந்நாராயணா, மாஸ்டர் பீஸ், தாரக், மஃப்டி உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஷான்வி ஸ்ரீவஸ்தவா, ஒரு படத்திற்காக ரூ. 2 முதல் 3 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறாராம்.