தனுஷ் நடித்து அதிக வசூல் செய்த திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இன்று ஹாலிவுட் சினிமா வரை பிரபலமாகியுள்ளார் நடிகர் தனுஷ்.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த இட்லி கடை படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் தேரே இஷ்க் மெயின்.
வருகிற 28ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், முன்னணி நடிகரான தனுஷ் இதுவரை நடித்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை இங்கு பார்க்கலாம் வாங்க.
- ராயன் - ரூ. 157 கோடி
- குபேரா - ரூ. 138 கோடி
- வாத்தி - ரூ. 116 கோடி
- திருச்சிற்றம்பலம் - ரூ. 101 கோடி
- ராஞ்சனா - ரூ. 87 கோடி
- கேப்டன் மில்லர் - ரூ. 75 கோடி
- இட்லி கடை - ரூ. 71 கோடி
- கர்ணன் - ரூ. 68 கோடி
- வடசென்னை - ரூ. 60 - 65 கோடி