அட்ஜெஸ்ட் பண்ணி இருங்க.. தெருநாய்கள் பிரச்சனை குறித்து நடிகை நிவேதா பரபரப்பு பேச்சு!

அட்ஜெஸ்ட் பண்ணி இருங்க.. தெருநாய்கள் பிரச்சனை குறித்து நடிகை நிவேதா பரபரப்பு பேச்சு!

சினிமா, பேட்மிண்டன் விளையாட்டு, கார் ரேஸ் போன்றவற்றில் மிகவும் ஆர்வம் கொண்டவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஒருநாள் கூத்து திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா.

இவர் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதேசமயம் தெலுங்கிலும் சில ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தெரு​நாய்​களை பாது​காக்​கக்கோரி சென்னை எழும்​பூர் லேங்ஸ் கார்​டன் சாலை​யில் ஹெவன் ஃபார் அனிமல்ஸ் என்ற என்​ஜிஓ சார்​பாக அமை​திப் பேரணி நடை​பெற்​றது.

இதில் நடிகை நிவேதா பெத்​து​ராஜ், நடன இயக்​குநர் ராபர்ட் மற்​றும் விலங்கு நல ஆர்​வலர்​கள் என பலர் கலந்​து​கொண்​டனர். இதில் நிவேதா பெத்துராஜ் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், "தெரு நாய்​கள் பற்றி மக்கள் மனதில் தேவை​யில்​லாத பயம் ஏற்பட்டுள்ளது. தெரு நாய்​களை பிடித்து அகற்றி காப்​பகங்​களில் அடைத்து வைக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் அளித்த தீர்ப்பை எங்​களால் பார்த்​துக் கொண்டு இருக்க முடி​யாது.

அட்ஜெஸ்ட் பண்ணி இருங்க.. தெருநாய்கள் பிரச்சனை குறித்து நடிகை நிவேதா பரபரப்பு பேச்சு! | Nivetha About Street Dogs Details

நாய்களுக்கு கிட்டதட்ட 2500 காப்பகங்கள் அமைக்க வேண்டும். அந்த காப்பகங்கள் அமைப்பதற்கு ஆகும் செலவு, பாராமரிப்பு செலவை, என்ஜிஓவிடம் கொடுத்து, நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம்.

இந்த உலகத்தில் மனிதர்கள் மட்டும் தான் வாழ வேண்டும் என நினைப்பது சரியில்லை. கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி இருங்க" என்று தெரிவித்துள்ளார்.      

LATEST News

Trending News