கனா காணும் காலங்கள் ஜோ-வை ஞாபகம் இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

கனா காணும் காலங்கள் ஜோ-வை ஞாபகம் இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

தி OG யுதன்

இப்போதெல்லாம் எதற்கு எடுத்தாலும் OG என்கிற வார்த்தையை பயன்படுத்தி வருகிறார்கள். OG திரைப்படம், OG ஹீரோ, OG கிரிக்கெட் வீரர் என பல விஷயங்களுக்கு இந்த OG என்கிற வார்த்தை பயன்படுகிறது.

இந்த வரிசையில் சின்னத்திரையில் OG சீரியலாக ஒரு காலகட்டத்தில் கொண்டாடப்பட்ட ஒன்றுதான் கனா காணும் காலங்கள். 90ஸ் கிட்ஸ்களிடம் இருந்து இந்த சீரியலையும், இந்த சீரியலில் நடித்தவர்களையும் பிரிக்கவே முடியாது.

கனா காணும் காலங்கள் ஜோ-வை ஞாபகம் இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Kana Kaanum Kaalangal Actor Yuthan Recent Photo

கனா காணும் காலங்கள் சீரியலில் 'ஜோ' என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யுதன் பாலாஜி. இவர் வெள்ளித்திரையில் வெளிவந்த காதல் சொல்ல வந்தேன், பட்டாளம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், அதன்பின் இவருக்கு வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.

பிரதீப் செய்த செயல் 

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற LiK திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன், நடிகர் யுதன் பாலாஜி குறித்து பேசியிருந்தார். தன்னுடைய வாழ்க்கையில் இவர் தனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.

யுதன் குறித்து பிரதீப் பேசியது வைரலாக, தற்போது இந்த செயலுக்காக தனது நன்றியை நடிகர் யுதன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் யுதனின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதோ பாருங்க.. 

Gallery

 

 

LATEST News

Trending News

HOT GALLERIES