கமல் நடிக்கும் புதிய படம்.. டெஸ்ட் ஷூட்டில் விண்வெளி நாயகன் மெர்சல்.. சூப்பர் சர்ப்ரைஸ்

கமல் நடிக்கும் புதிய படம்.. டெஸ்ட் ஷூட்டில் விண்வெளி நாயகன் மெர்சல்.. சூப்பர் சர்ப்ரைஸ்

சென்னை: கமல்ஹாசன் இப்போது பிஸியாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான தக் லைஃப், இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தன. இதனால் இளம் இயக்குநர்களுடன் கைகோர்த்திருக்கிறார். அதன்படி சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லவில்லை. இந்நிலியில் அவர் நடிக்கும் புதிய படத்தின் டெஸ்ட் ஷூட் நடந்து முடிந்திருப்பதாக தெரிகிறது.

அரசியல் களத்துக்கு சென்ற கமல்ஹாசனுக்கு அங்கு பெரிய அளவில் நல்லது நடக்கவில்லை. இதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். அதன்படி தனது ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. வசூலில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 400 கோடி ரூபாய்வரை வசூலித்ததாக கூறப்பட்டது. விக்ரம் கொடுத்த வெற்றி கமலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Kamal Haasan s Next With Arun Kumar Test Shoot Completed New Look Sparks Buzz

இரண்டு படங்களுமே மோசமான தோல்வி: அந்த உற்சாகத்தோடு சீனியர் இயக்குநரான ஷங்கருடன் இந்தியன் 2 படத்தில் இணைந்தார். முதல் பாகம் போன்றே இதுவும் ஹிட்டாகும் என்று எதிர்பார்த்தால்; படம் பாதாளத்தில் விழுந்துவிட்டது. சரி இந்தியன் 2தான் மோசம் செய்துவிட்டது; மணிரத்னமாவது காப்பாற்றுவார் என எண்ணி தக் லைஃப் படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படமும் அடிதான் வாங்கியது. இந்தியன் 2 போலவே தக் லைஃபையும் ட்ரோல் மெட்டீரியலாக மாற்றிவிட்டார்கள் ரசிகர்கள்.

இதுதான் முதன்முறை: அவரது ஒட்டுமொத்த கரியரில் இதுவரை அந்த இரண்டு படங்கள் மாதிரி வேறு எந்த படமும் இவ்வளவு மோசமான கிண்டலையும் விமர்சனத்தையும் சந்திக்கவில்லை என்பதுதான் உண்மை. இதனால் உடனடியாக ஒரு வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறார் உலக நாயகன். இனிமேல் சீனியர் இயக்குநர்களை நம்புவதைவிடவும் இளைய இயக்குநர்களுடன் கூட்டணி வைக்கலாம் என்ற முடிவில் மேற்கொண்டு உறுதியானார்.

என்ன படம்?: அந்தவகையில், தென்னிந்திய சினிமாவில் பிரபலமான சண்டை பயிற்சியாளர்களாக வரும் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகினார். இந்தப் படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக அன்பறிவு, கமல்ஹாசன் ஆகியோர் அமெரிக்காவுக்கெல்லாம் சென்றுவிட்டு வந்தார்கள். ஆனால் படம் அறிவிக்கப்பட்டதோடு சரி அதற்கு பிறகு எதுவுமே நடக்கவில்லை. இதற்கு முன்னதாக ஹெச்.வினோத்தோடு இணைந்து பணியாற்றவிருந்த படம் மாதிரி இதுவும் ட்ராப்பாகிவிடுமோ என சந்தேகமும் பலருக்கு எழுந்திருக்கிறது.

புதிய படம்: இந்நிலையில் கமல்ஹாசனின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா, வீர தீர சூரன் ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறாராம். நேற்று அதற்கான டெஸ்ட் ஷூட்டிலும் பங்கேற்ற அவர்; பேண்ட் சட்டை போட்டுக்கொண்டு கையில் வீச்சு கத்தியுடன் போஸ் கொடுத்திருந்தார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று தெரிகிறது. முன்னதாக சித்தா படத்துக்காக அருணை கமல் வெகுவாக பாராட்டியிருந்தது நினைவுகூரத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES