குக் வித் கோமாளி 7 சீசனில் முதல் எலிமினேஷன்... எந்த ஜோடி தெரியுமா?

குக் வித் கோமாளி 7 சீசனில் முதல் எலிமினேஷன்... எந்த ஜோடி தெரியுமா?

குக் வித் கோமாளி 7

சமையல் ப்ளஸ் கலாட்டா என புதிய கான்செப்டில் விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் இந்த சமையல் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருந்தது. முதல் சீசனில் கிடைத்த வெற்றி அடுத்தடுத்து ஒவ்வொரு சீசனாக ஒளிபரப்பாகி இப்போது 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த 7வது சீசன் புதிய கான்செப்டுன் டபுள் போட்டியாளர்களுடன் ஒளிபரப்பாகிறது.

டபுள் ட்ரபிள் என்ற கான்செப்டில் புதிய நடுவர், புதிய போட்டியாளர்கள், கோமாளிகளோடு 7வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 6 சீசன்கள் வரை இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரக்ஷனுக்கு பதிலாக 7வது சீசனை மாகாபா ஆனந்த் மற்றும் ஷாலின் ஷோயா இருவரும் தொகுத்து வழங்குகிறார்கள்.

கடந்த ஏப்ரல் 4ம் தேதி இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியது.

குக் வித் கோமாளி 7 சீசனில் முதல் எலிமினேஷன்... எந்த ஜோடி தெரியுமா? | Cooku With Comali Season 7 First Elimination

எலிமினேஷன்

அரவிந்த் சீஜு மற்றும் சங்கீதா சாய், கானா வினோத் மற்றும் பாக்யா, அறந்தாங்கி நிஷா மற்றும் ரியாஸ் அலி, மகேந்திரன் மற்றும் சாந்தா, திராவிட் செல்வம் மற்றும் ராஜி திராவிட், கொங்கு மஞ்சுநாதன் மற்றும் ராஜேஸ்வரி மஞ்சுநாதன், சித்து சித் மற்றும் ஸ்ரேயா அஞ்சன், மனோ மற்றும் ஜமீலா பாபு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல ஜோடிகள் ஆவர். தற்போது குக் வித் கோமாளி 7வது சீசனில் முதல் எலிமினேஷன் நடந்துள்ளது.

அறந்தாங்கி நிஷா மற்றும் ரியாஸ் அலி எலிமினேட் ஆகியுள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES