பிரபல சீரியல் நடிகை ஸ்ரீநிதிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. வெளிவந்த வீடியோ இதோ
விஜய் டிவியில் ஒளிபரப்பான 7C என்கிற சீரியலில் சிறுமியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி.
இதன்பின் ரோமாபுரி பாண்டியன், பகல் நிலவு, வள்ளி போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். இதை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோஹினி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.

இந்த நிலையில், தற்போது சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக வலம் வரும் ஸ்ரீநிதிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. இவருடைய நிச்சயதார்த்தத்தில் சீரியல் நடிகைகள் சைத்ரா ரெட்டி, கேப்ரியல்லா, நக்ஷத்ரா கலந்துகொண்டனர்.
அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும் தங்களது வாழ்த்துகளை ஸ்ரீநிதிக்கு தெரிவித்து வருகின்றனர்.