தன் மகள் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய மூன்று முடிச்சு சீரியல் நடிகை ப்ரீத்தா... வீடியோவுடன் இதோ
நடிகை ப்ரீத்தா
தமிழ் சின்னத்திரையில் கலக்கும் எல்லா பிரபலங்களுமே ரசிகர்களிடம் பிரபலம்.
அப்படி பல வருடங்களாக சின்னத்திரை நடிகராகவும், படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சஞ்சீவ். இவரது மனைவி ப்ரீத்தியும் சீரியல்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

இவர் கண்ணான கண்ணே, பொம்மலாட்டம், ஆனந்த ராகம் என நிறைய சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது சன் டிவியில் டாப் டிஆர்பியில் ஓடிக் கொண்டிருக்கும் மூன்று முடிச்சு சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதேபோல் சொந்தமாக ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதிலும் நிறைய வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.
கொண்டாட்டம்
சஞ்சீவ்-ப்ரீத்தி தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் இருவரும் தங்களது மகளின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அவர்களின் மகளுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.