தென்னை மரம் ஏறிய நடிகையின் ஜாக்கெட்டை பாத்தீங்களா? இப்படி கூடவா மாடல் இருக்கு?

தென்னை மரம் ஏறிய நடிகையின் ஜாக்கெட்டை பாத்தீங்களா? இப்படி கூடவா மாடல் இருக்கு?

சென்னை: மலையாள திரையுலகில் தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் துணிச்சலான கருத்துகளால் கவனம் பெற்ற நடிகை ரீமா கல்லிங்கல் நடித்த 'தி மித் ஆஃப் ரியாலிட்டி' திரைப்படம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அந்த படத்தின் மூலம் மீண்டும் கவனம் பெற்ற ரீமா, தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக அவர் அணிந்திருந்த வித்தியாசமான ஜாக்கெட்டை பார்த்த ரசிகர்கள், "இது என்ன மாடல் ஜாக்கெட்?" என்று கேட்டு வருகின்றனர்.

ரீமா கல்லிங்கல்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்த ரீமா கல்லிங்கல், மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் சர்வதேச வணிக மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றவர். கலாமண்டலம் பினோய் மற்றும் கலாமண்டலம் ராஜஸ்ரீ ஆகியோரிடம் எட்டு ஆண்டுகள் பரதநாட்டியம் கற்றார். 2008ஆம் ஆண்டு நடைபெற்ற 'மிஸ் கேரளா' போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றார். அதனைத் தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான 'ரீது' மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 'இந்தியன் ரூபி' உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2012ஆம் ஆண்டு வெளியான '22 Female Kottayam' படத்தில் டெஸ்ஸா கதாபாத்திரத்தில் நடித்ததற்காக, கேரள மாநில அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.

Reema Kallingal photos

தென்னை மரம் ஏறிய நடிகை: ரீமா நடித்த 'தி மித் ஆஃப் ரியாலிட்டி' திரைப்படம் வெளியாகியபோது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அந்த படத்தில், ஒரு தனி தீவில் அனைத்து வேலைகளையும் தனியாக செய்து வாழும் பெண்ணாக அவர் நடித்திருந்தார். இதில் ரீமா தென்னை மரம் ஏறும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்த காட்சிகளை வைத்து சிலர் இணையத்தில் ட்ரோல் செய்தாலும், உண்மையில் அந்த காட்சிக்காக ரீமா முறையாக பயிற்சி எடுத்து கடுமையாக உழைத்ததை பலரும் பாராட்டினர்.

Reema Kallingal photos

இது என்ன மாடல்?: சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரீமா கல்லிங்கல், 2013ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் ஆஷிக் அபுவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் கேரளாவில் பிரபலமான 'மமாங்' மற்றும் 'பாபாயா' உள்ளிட்ட உணவகங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ரீமா கல்லிங்கல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வித்தியாசமான காலர் டிசைன் கொண்ட ஜாக்கெட்டுடன் புடவை அணிந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "இது என்ன மாடல் ஜாக்கெட்?" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES