Peddi Mistakes: பெத்தி படத்தோட பெரிய பிரச்னையே ஜான்வி கபூர் தான்.. வேற மூட் செட் பண்ணிட்டாங்க!

Peddi Mistakes: பெத்தி படத்தோட பெரிய பிரச்னையே ஜான்வி கபூர் தான்.. வேற மூட் செட் பண்ணிட்டாங்க!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் படமாகட்டும், தோனி உள்ளிட்ட பல ஸ்போர்ட்ஸ் படங்களாகட்டும் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பரபரப்பான சூழலையும் ஹீரோ வெல்வாரா? மாட்டாரா? என்கிற பதற்றத்தை தான் இயக்குநர்கள் அதிகம் பற்ற வைப்பார்கள்.

ஆனால், புச்சி பாபு சனா அந்த விஷயத்தை பெத்தி படத்தின் 2ம் பாதியில் அதிகம் வைத்து ரசிகர்களை கவர்ந்தாலும் முதல் பாதியில் கமர்ஷியலுக்காகவே ஹீரோயின் ஜான்வி கபூரை போட்டு பெரிய தப்பு செய்துவிட்டார் என ராம்சரண் ரசிகர்களே திட்ட ஆரம்பித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளில் ராம் சரணின் பெத்தி திரைப்படம் உலகளவில் 112 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பெத்தி பட்ஜெட் இத்தனை கோடியா?: புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வெளியான பெத்தி படத்தின் பட்ஜெட் மட்டும் 350 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ராம்சரணுக்கு மட்டும் 100 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது என்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசை, ரத்னவேல் கேமரா என படத்தை பிரம்மாண்டமாகவே தயாரிப்பு நிறுவனம் தாராளமாக செலவு செய்து எடுத்துள்ளது. முதல் வார முடிவிலேயே 350 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெரிய மைனஸ்: பெத்தி படத்தில் விளையாட்டு மூலம் போராட்டம் பண்ணிய ஒரு மலைவாழ் கிராமத்து இளைஞனின் கதையை அருமையாக இயக்கிய இயக்குநர் புச்சி பாபு சனாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் குவியக் காரணமே அச்சியம்மா கதாபாத்திரத்தில் அந்த ஊருக்கே செட்டாகாத odd பீஸாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு படு கவர்ச்சியாக நடித்துள்ள ஜான்வி கபூர் கதாபாத்திரம் தான் என்கின்றனர்.

டோலிவுட் மசாலா: ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு டோலிவுட் சென்றுவிட்ட நிலையில், இன்னமும் ஏன் டோலிவுட் மசாலா என அதீத கவர்ச்சி காட்சிகளை ஹீரோயின்களை வைத்து படமாக்கி வருகின்றனர் என்கிற கேள்வி எழுத்தான் செய்கிறது. ஜான்வி கபூர், ஸ்ருதிஹாசன் நடனமாடும் அந்த ஐட்டம் டான்ஸ் பாடலும் தேவையில்லாத ஆணி தான் என்கின்றனர். படத்தில் நல்லா நடிக்க ஒரு சீன் கூட ஜான்வி கபூருக்கு வைக்கவில்லை என்றும் தேவரா படத்திலும் இப்படித்தான் அவரை கிளாமராகவே பயன்படுத்தினர் என்கின்றனர். நடிகை ஸ்ரீதேவி ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பால் ஸ்கோர் செய்த நிலையில், ஜான்வி கபூர் ஏன் இப்படி கிளாமரை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


பாவாடை அறுக்கும் சீன், லிப் லாக் காட்சிகள்: ஜான்வி கபூருக்கு இருட்டில் திருட்டுத்தனமாக அவரது அனுமதி இல்லாமல் ராம்சரண் கொடுக்கும் லிப் லாக் காட்சி மற்றும் வில்லன் திவ்யந்துவின் ஆட்கள் மேடையிலேயே ஜான்வி கபூரின் பாவாடையை அறுத்து அம்மணமாக்கும் காட்சி உள்ளிட்டவை இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா படத்துக்கு கொஞ்சமும் செட்டாகவில்லை என்பதே பலரது கருத்தாக உள்ளது. அதன் பின்னர் திடீரென எடிட் காரணமாக காணாமல் போகும் ஜான்வி கபூர் திடீரென இடைவேளைக்குப் பிறகு குஸ்தி வீரனாக மாறியிருக்கும் ராம் சரணை தேடி கண்டுபிடித்து காதலிக்கும் காட்சிகள் எல்லாம் வொர்க்கவுட் ஆகவே இல்லை. அந்த இடங்களையும் இயக்குநர் சரியாக செதுக்கி இருந்தால் சில தேவையற்ற நெகட்டிவ் விமர்சனங்களை தவிர்த்து இருக்கலாம். ஆனால், ராம் சரண் தனியாளாக தனது தோளில் ஒட்டுமொத்த படத்தையும் கடைசி வரை சுமந்துச் சென்று இது ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா மற்றும் இன்ஸ்பிரேஷன் படமாக முடித்த விதம் சிறப்பு.

LATEST News

Trending News

HOT GALLERIES