ப்ரீத்தி ஷர்மா நடிக்கும் புதிய சீரியல், எந்த தொலைக்காட்சி தெரியுமா?... முழு நடிகர்கள் விவரம்
ஜீ தமிழ்
ஜீ தமிழ், சன் டிவி-விஜய் டிவிகளுக்கு இடையே தரமான சீரியல்கள், மக்கள் கொண்டாடும் ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி முன்னேறி வருகிறார்கள்.
பல லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையை ஜீ தமிழ் தொலைக்காட்சி பெற்றுள்ளது. சமீபத்தில் ஜீ தமிழில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான சரிகமப சிறுவர்களுக்கான நிகழ்ச்சி முடிவுக்கும் வந்துவிட்டது.
அபிஷேகா இந்த சீசனின் டைட்டிலை வென்றுள்ளார் அவருக்கு மக்கள் மனதார வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

சீரியல்
ரியாலிட்டி ஷோ ஒன்றும் முடிவடைந்துள்ள நிலையில் இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது.
அதாவது சாமந்தி என்ற பெயரில் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம். அதில் சுர்ஜித்குமார், ப்ரீத்தி ஷர்மா, ஷமிதா, கீர்த்தனா, அப்சல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.