மூன்று முடிச்சு சீரியலில் திடீரென இரண்டு நடிகர்கள் மாற்றம்! போட்டோவுடன் இதோ

மூன்று முடிச்சு சீரியலில் திடீரென இரண்டு நடிகர்கள் மாற்றம்! போட்டோவுடன் இதோ

சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது மூன்று முடிச்சு. அதில் கதை தொடர்ந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. வில்லன் ரஞ்சித் சிறைக்கு அனுப்பப்பட்டுவிட்ட நிலையில், இரண்டு பெண்கள் காணாமல் போன விஷயம் தான் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது.

ஹரிதா பிணமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரை கொலை செய்தது யார் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் சுரேகாவின் நிலை என்ன, அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என தெரியவில்லை.

நந்தினி மீது தான் தற்போது சுந்தரவல்லி சந்தேகம் தெரிவித்து வருகிறார். அதனால் போலீசும் அவரை பற்றியும் குடும்பத்தினர் பற்றியும் விசாரித்து வருகின்றனர்.

 

நடிகர்கள் மாற்றம்

இந்நிலையில் இரண்டு முக்கிய ரோல்களில் நடித்து வந்த நடிகர்களை மாற்றி இருக்கின்றனர். நந்தினியின் அப்பா ரோலில் நடித்து வந்த நடிகர் தேனி முருகன் விலகிவிட்ட நிலையில் அவருக்கு பதிலாக வேறு நடிகரை கொண்டு வந்திருக்கின்றனர்.

மேலும் நந்தினியின் தங்கை ரோலில் நடித்த நடிகையும் மாற்றப்பட்டு இருக்கிறார். "அவருக்கு பதில் இவர்" என இதை அறிவித்து இருக்கின்றனர். 

LATEST News

Trending News

HOT GALLERIES