பண்ணை வீட்டுக்கு வர்றீங்களா? அசிங்கத்தை அக்குவேறாகப் பிரித்த நடிகையின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ்

பண்ணை வீட்டுக்கு வர்றீங்களா? அசிங்கத்தை அக்குவேறாகப் பிரித்த நடிகையின் உச்சகட்ட கவர்ச்சி போட்டோஸ்

சென்னை: தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களாலும் அறியப்பட்ட நடிகை கிர்ராக் சீதா காஸ்டிங் கவுச் குறித்த பரபரப்புப் பேட்டிக்குப் பிறகு, தற்போது இன்ஸ்டாகிராமில் மழையில் நனைந்தபடி வெளியிட்டுள்ள படு சூடான புகைப்படங்கள் இளசுகளை சுண்டி இழுத்துள்ளது.

நடிகை கிர்ராக் சீதா: ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சீதா, ஆரம்பத்தில் குடும்ப வறுமை காரணமாகத் தான் படித்துக்கொண்டே இருக்கும் போதே, குழந்தைகளுக்குத் டியூஷன் எடுத்து குடும்பத்திற்கு பண உதவி செய்தவர். பின்னர், சினிமா மீதான ஆர்வத்தால் யூடியூப் மற்றும் சோஷியல் மீடியாக்களில் ஷார்ட் ஃபிலிம்கள், காமெடி மற்றும் போல்டான வீடியோக்களைப் பதிவிட்டுப் பிரபலமானார்.

Bigg Boss Kirrak Seetha

சினிமா வாய்ப்பு: இந்தத் திறமை தான் இவருக்குத் தெலுங்கில் மெகா ஹிட்டான 'பேபி' படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தேடித்தந்தது. அந்தப் படத்தில் இவர் நடித்த நெகட்டிவ் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, தெலுங்கு பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று, கிட்டத்தட்ட 40 நாட்கள் வரை அந்த வீட்டில் தாக்குப்பிடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

பண்ணை வீட்டுக்கு வரியா: சமீபத்தில் தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த கிர்ராக் சீதா, எனக்கு 21 வயது இருக்கும்போது, '7 ஆர்ட்ஸ்' ஷூட்டிங்கில் இருந்த என்னை ஒரு நபர் போன் செய்து சினிமா வாய்ப்பு இருப்பதாக அழைத்தார். கதை பற்றி பேச வேண்டும், பண்ணை வீட்டுக்கு வாங்க என்றார். ஏன் அங்கே வர வேண்டும்? என்று கேட்டதற்கு, முழு டீமும் அங்கேதான் இருக்கிறது என்று மழுப்பினார். எனக்கு ஏதோ தப்பாகப் பட்டதால் நான் போகவில்லை. சில நாட்கள் கழித்து மீண்டும் கால் செய்த அந்த நபர், பண்ணை வீட்டுக்கு வந்து அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் உங்களுக்கு ரூ. 25 லட்சம் தருகிறோம் என்று ஓப்பனாகவே கேட்டார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து, காசுக்காக என் சுயமரியாதையை விற்க முடியாது என்று முகத்திலடித்தாற்போல் பேசிவிட்டேன் என்றார்.

Bigg Boss Kirrak Seetha

கிளாமர் ட்ரீட்: திரைத்துறையின் இருண்ட பக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு நடிகை கிர்ராக் சீதா, இன்ஸ்டாகிராமில், கறுப்பு நிற மார்டன் பிளவுஸ் மற்றும் மெல்லிய வெள்ளை நிறப் புடவை அணிந்து, செயற்கை மழையில் சொட்டச் சொட்ட நனைந்தபடி உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார். மழையின் துளிகள் உடலை நனைக்க, புடவை ஒட்டிக்கொண்டு காட்டும் அந்த நளினமான போஸ்கள் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளன. இந்த போட்டோவை பார்த்த ஃபேன்ஸ் பண்ணை வீட்டுக்கு கூப்பிட்டவனுக்கெல்லாம் இதுதான் பதிலடியா அம்மணி என கேட்டு வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES