ஹபீபி முதல் குஷ்பு மகளின் டபுள் ஆக்குபன்ஸி வரை.. கடந்த வாரம் வெளியான படங்களின் வசூல் என்ன ஆச்சு?

ஹபீபி முதல் குஷ்பு மகளின் டபுள் ஆக்குபன்ஸி வரை.. கடந்த வாரம் வெளியான படங்களின் வசூல் என்ன ஆச்சு?

சென்னை: தமிழ் சினிமாவுக்கு மே மாதம் சிறப்பான மாதமாக அமைந்தது. சூர்யாவின் கருப்பு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி தியேட்டர் ஓனர்களையும் படக்குழுவையும் விநியோகஸ்தர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஆனால், இந்த ஜூன் மாதம் மீண்டும் பழைய கதையாகவே தியேட்டர்கள் டல் அடிக்க ஆரம்பித்து விட்டன. அப்செஷன் படத்தை நள்ளிரவு நேரத்திலும் காண ரசிகர்கள் காத்திருக்கும் அதே நேரத்தில் தமிழில் கடந்த வாரம் வெளியான படங்களின் வசூல் படுத்தே விட்டதய்யா என்கிற சூழலுக்குச் சென்று விட்டது.

இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே கருப்பு, தாய் கிழவி, யூத், பிளாஸ்ட், வித் லவ் உள்ளிட்ட படங்கள் தான் இதுவரை லாபம் ஈட்டிய படங்கள் என்கின்றனர். மற்ற படங்கள் எல்லாம் அதிகளவில் நஷ்டத்தை மட்டுமே கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். இந்த வாரம் வெளியான படங்களின் வசூல் நிலவரம் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

ஹபீபி: இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் இஸ்லாமிய ரசிகர்களை அதிகம் டார்கெட் செய்து வெளியான ஹபீபி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையிலும், ரசிகர்கள் பெரிதாக அந்த படத்தை தியேட்டர்களில் கொண்டாட விரும்பவில்லை. இதெல்லாம் ஓடிடி மெட்டீரியல் என அவர்களே முடிவு கட்டி விட்டார்கள் என்றே தெரிகிறது. இதுவரை தமிழ்நாட்டில் வெறும் 86 லட்சமும் ஒட்டுமொத்தமாக 92 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக சாக்னிக் தெரிவித்துள்ளது. கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ், இஷா உள்ளிட்டோர் நடித்த இந்த ஹபீபி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெறவில்லை.

டபுள் ஆக்குபன்ஸி: குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் தயாரிப்பில் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் நிஜமாவே சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாதன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டபுள் ஆக்குபன்ஸி திரைப்படம் இளைஞர்களை டார்கெட் செய்து ஆண் பெண்ணாக மாறும் ஃபேண்டஸி கதையை படமாக எடுத்த நிலையிலும் படம் ஓடவில்லை. இதுவரை வெறும் 55 லட்சம் மட்டுமே படம் வசூல் செய்துள்ளது என்றும் படத்தின் பட்ஜெட் 6 கோடி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூன்றாம் கண், ஆட்டி வசூல்?: இந்த 2 படங்களின் வசூலாவது அரை கோடியை கடந்துள்ளது. ஆனால், மூன்றாம் கண் மற்றும் ஆட்டி உள்ளிட்ட படங்கள் வெளியானதே பலருக்கும் தெரியவில்லை. சில லட்சங்கள் கூட வசூல் செய்யவில்லை என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

நூறு சாமி, எங்கள் தங்கம் என்ன செய்யும்?: இந்த வாரம் தமிழ் சினிமாவில் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்துள்ள நூறு சாமி படம் வெளியாகிறது. பிச்சைக்காரன் மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும், சமந்தாவின் மா இன்டி பங்காரு திரைப்படம் தமிழில் எங்கள் தங்கம் என டப் செய்து வெளியாகிறது. இந்த 2 படங்கள் பாக்ஸ் ஆபீஸில் ஏதாவது மேஜிக் செய்தால் தான் இந்த மாதம் தமிழ் சினிமா தப்பிக்கும் என்கின்றனர். மேலும், கேஜிஆர் நடித்துள்ள அங்கீகாரம் உள்ளிட்ட படங்களும் இந்த வாரம் வெளியாகிறது.

Disclaimer: புதிய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் குறிப்பிட்ட இந்த தளங்களான https://www.sacnilk.com/, https://x.com/taran_adarsh மற்றும் https://x.com/rameshlaus போன்ற அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டது. பிலிமிபீட் தகவல் நோக்கங்களுக்காக இந்த எண்களை குறிப்பிடுகிறது என்றாலும், அவற்றின் துல்லியத்திற்கு பொறுப்பேற்காது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். இவை திரைப்பட வருவாயில் நம்பகமான தரவுகளுக்கு பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தளங்கள், மேலும் அவற்றின் அறிக்கைகளைக் குறிப்பிடுவது ஆன்லைனில் காணப்படும் தகவலை தெரிவிப்பதற்காக மட்டுமே.

LATEST News

Trending News

HOT GALLERIES