ரெட் அலர்ட் தான் போல.. என்னம்மா டிரெஸ் இது.. இஷா குப்தாவின் போல்ட் பிக்ஸ்!
மும்பை: பாலிவுட் நடிகை இஷா குப்தா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. இந்த அளவுக்கு கவர்ச்சியான உடையை அணிந்துக் கொண்டு இப்படி போஸ் கொடுத்துள்ளாரே என்றும் காற்று அடித்தால் என்ன ஆவது என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் 17.3 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள இஷா குப்தா வித்தியாசமான யோகாக்களை செய்து யோகா டீச்சர் என பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அவரிடம் இருந்து யோகா போட்டோக்கள் எல்லாம் வெளியாகாமல் இப்படியொரு கவர்ச்சியான போல்ட் போட்டோக்கள் தான் வெளியாகி உள்ளன.
40 வயதிலும் குறையாத கிளாமர்: கடந்த 2007ம் ஆண்டு ஃபெமினா மிஸ் இண்டர்நேஷனல் மகுடத்தை சூடிய பேரழகி தான் இஷா குப்தா. 2012ம் ஆண்டு ஜானத் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ராஸ் 3டி, சக்ரவியூக், ரஸ்டம், பேபி உள்ளிட்ட பல படங்களில் நடித்து கலக்கினார். வீடெவடு எனும் தெலுங்கு படத்திலும் யார் இவன் எனும் தமிழ் படத்திலும் நடித்துள்ளார். 2019க்கு மேல் பெரிதாக படங்களில் நடிக்காமல் பிரேக் எடுத்த இஷா குப்தா தமால் 4 படத்தில் நடித்து வருகிறார். 40 வயதை கடந்த நிலையிலும் இன்னமும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி ராணியாக கலக்கி வருகிறார்.
ரெட் அலர்ட்: சிகப்பு நிறத்தில் எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் மார்பகங்களை மறைத்தபடி இருக்கும் ஆடையை அணிந்துக் கொண்டு செம போல்டாக போஸ் கொடுத்துள்ளார் இஷா குப்தா. இந்த உடை சற்று காற்று அடித்தாலும் பப்பி ஷேமாக மாற்றி விடுமே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு போட்டோக்களுக்கு ஃபயர் விட்டு வைரலாக்கி வருகின்றனர்.
குவியுது லைக்ஸ்: ஓடிடி பக்கம் ஒதுங்கிய இவருக்கு அங்கேயும் பெரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதன் காரணமாக இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான யோகாக்களை போட்டு ரசிகர்களை கவர்ந்து வந்த இஷா குப்தா இப்படி ஹாட் போஸ்களை கொடுத்தால் பாலிவுட்டில் மீண்டும் வாய்ப்புக் கிடைக்கும் என கணக்குப் போட்டு இறங்கி அடித்து வருகிறாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.