மார்புக்கு மத்தியில் மிரட்டலான டாட்டூ.. சட்டையைத் திறந்து போல்ட் போஸ் கொடுத்த எதிர்நீச்சல் காயத்ரி!
சென்னை: தமிழ் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தனது எதார்த்தமான நடிப்பால் அண்மைக்காலமாகப் பெரும் கவனம் பெற்று வருபவர் நடிகை காயத்ரி கிருஷ்ணன். குறிப்பாக, சன் டிவியின் மெகா ஹிட் சீரியலான எதிர்நீச்சல் தொடரில், நெகட்டிவ் கலந்த அதிரடி பாத்திரமான 'ஜான்சி ராணி' கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்தத் தமிழ் நெஞ்சங்களையும் கவர்ந்தார்.

கஷ்டப்பட்டேன்: சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட காயத்ரி, 'எதிர்நீச்சல்' முதல் பாகத்தில் நடித்தபோது தான் பட்ட கஷ்டங்களைப் பகிர்ந்து கொண்டார். சீரியலில் என் கதாபாத்திரம் எப்போதும் வெற்றிலை போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், நிஜ வாழ்க்கையில் எனக்கு வெற்றிலை போட்டுப் பழக்கமே இல்லை. படப்பிடிப்பில் தொடர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டே இருந்ததால் வாய் முழுக்கப் புண்ணாகிவிட்டது. இதனால் ஷூட்டிங் முடிந்ததும் தினமும் நேராக மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு தான் வீடு திரும்புவேன் என்று தனது அர்ப்பணிப்பைக் கூறினார். இந்த ஜான்சி ராணி பாத்திரமும், 'அயலி' வெப் தொடரும் தான் தனக்கு அடுத்தடுத்து ஃபேமிலி, காதலிக்க நேரம் இல்லை, குடும்பஸ்தன், ஒத்த ஓட்டு முத்தையா, மிஸ்டர் ஹவுஸ் கீப்பர் எனப் பல பட வாய்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ளதாக பேசி இருந்தார்.
மார்புக்கு மத்தியில் டாட்டூ: டாட்டூ பிரியையான காயத்ரி கிருஷ்ணன், ஏற்கனவே தனது கை, கழுத்து என உடலின் பல இடங்களில் டாட்டூ குத்தியுள்ளார். அந்த வரிசையில், தற்போது மார்புக்கு மத்தியில் சூரியக் கதிர்கள், பிறை நிலா மற்றும் ஒரு சீறும் பாம்பு இருப்பது போன்ற ஒரு செம்ம பவர்ஃபுல்லான டாட்டூவை குத்தியுள்ளார். கருப்பு நிறச் சட்டையின் மேல் பட்டன்களைத் திறந்து, அந்த டாட்டூ தெரியும்படி அவர் கொடுத்துள்ள மாஸ் மற்றும் போல்டான போஸ் தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த டாட்டுவை பார்த்த ஃபேன்ஸ் சீரியலில் பார்த்த ஜான்சி ராணியா இது? நிஜத்துல செம்ம மாடர்ன் மற்றும் போல்டான ஆளா இருக்காங்களே என ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளைத் தட்டிவிட்டு இந்த போட்டோக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.