ஸ்பைடர்மேன் மாதிரி சுவற்றில் தலைகீழாக நின்ற அபிராமி.. 42 வயசுல என்னா ஃபிட்னஸ்.. மிரண்டுபோன ரசிகர்கள்

ஸ்பைடர்மேன் மாதிரி சுவற்றில் தலைகீழாக நின்ற அபிராமி.. 42 வயசுல என்னா ஃபிட்னஸ்.. மிரண்டுபோன ரசிகர்கள்

சென்னை: தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை அபிராமி, வயது என்பது வெறும் எண் மட்டும்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். சமீப காலமாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் அவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

அபிராமி பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஸ்பைடர்மேன் போல சுவரில் தலைகீழாக பேலன்ஸ் செய்து நிற்கும் சவாலை அசால்ட்டாக செய்து காட்டியிருக்கிறார். இரண்டு கால்களையும், ஒரு கையையும் சுவரில் ஊன்றிக்கொண்டு, ஒரே ஒரு கையை மட்டும் தரையில் வைத்து உடலை முழுவதுமாக பேலன்ஸ் செய்யும் அந்த போஸ், பார்ப்பவர்களையே ஆச்சரியப்பட வைக்கிறது. அதுமட்டுமில்லாமல், அந்த போஸை எப்படி செய்தார் என்பதையும் வீடியோவில் அழகாக காட்டியிருக்கிறார்.

ஸ்பைடர் - மேன்: இந்த வீடியோவை பகிர்ந்த அவர், "Just HAD to do the Spidey Challenge!" என்று கேப்ஷன் பதிவிட்டுள்ளார். அதாவது, "ஸ்பைடர்மேன் சேலஞ்சை செய்து பார்க்காமல் இருக்க முடியவில்லை" என்ற அர்த்தத்தில் அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

Abhirami Nails Spider-Man Challenge at 42 Leaves Fans Amazed With Incredible Fitness

அபிராமியை பொறுத்தவரை, ஒரு காலத்தில் குடும்பக் கதைகளிலும், வலுவான உணர்ச்சி காட்சிகளிலும் அதிகமாக நடித்தவர். விருமாண்டி படம் இவரது நடிப்புத் திறமைக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம். கமல்ஹாசனின் தீவிர ரசிகையான இவர், குணா படத்தில் கமல் காதலிக்கும் பெண்ணின் பெயர் அபிராமி என்பதா, தனது பெயரை அபிராமி என்று மாற்றி வைத்துக் கொண்ட வெறித்தனமான ஃபேன் கேர்ள்.


ஆக்‌ஷனில் மிரட்டிய அபிராமி: அபிராமி, சமீபத்தில் வெளியான 'பிளாஸ்ட்' திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். அந்த படத்தில் அர்ஜுனுடன் இணைந்து நடித்திருந்த அவர், ஆக்‌ஷன் காட்சிகளில் எந்த சமரசமும் இல்லாமல் மிரட்டியிருந்தார். அந்த கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைத்து, தனியாக உடற்பயிற்சி மற்றும் ஆக்‌ஷன் பயிற்சிகளையும் எடுத்திருந்ததாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

அப்படியிருக்கும் போது, தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த ஸ்பைடர்மேன் சேலஞ்ச் வீடியோ, அந்த கடினமான பயிற்சிகளின் இன்னொரு வெளிப்பாடாகவே ரசிகர்கள் பார்க்கிறார்கள். 42 வயதிலும் இப்படி ஒரு பேலன்ஸ், இப்படி ஒரு ஃப்ளெக்சிபிலிட்டி எப்படி சாத்தியம் என்று பலரும் ஆச்சரியப்பட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.

செம ஃபிட்னஸ்: சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது. "இது ஸ்பைடர்மேனா இல்லை அபிராமியா?", "42 வயசுல இப்படி ஒரு ஃபிட்னஸ்ஸா?", "இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்குறீங்க" என்று ரசிகர்கள் கமெண்ட் பதிவிட்டு அவரை பாராட்டி வருகின்றனர்.

ஒரு நடிகையாக மட்டும் இல்லாமல், உடல்தகுதியிலும் தொடர்ந்து தன்னை மெருகேற்றிக்கொண்டு வரும் அபிராமி, தற்போது பகிர்ந்துள்ள இந்த ஸ்பைடர்மேன் சேலஞ்ச் வீடியோவின் மூலம் மீண்டும் இணையவாசிகளின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News