நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்.. தேவா குடும்பத்தில் மற்றொரு சோகம்

நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்.. தேவா குடும்பத்தில் மற்றொரு சோகம்

Actor Karthik Sabesh Passed Away: இசையமைப்பாளர் தேவா கடந்த சில நாட்களுக்கு உயிரிழந்த நிலையில், அவருடைய குடும்பத்தில் இருந்து நடிகராக வந்த கார்த்திக் சபேஷ் இன்று காலமானார்.

 

கார்த்திக் சபேஷ்

வல்லவன், பட்டத்து யானை, உதயம் NH 4, காதல் சொல்ல வந்தேன் போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கார்த்திக் சபேஷ். இவர் மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகன். இவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 37.

நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்.. தேவா குடும்பத்தில் மற்றொரு சோகம் | Actor Karthik Sabesh Passed Away

கடந்த ஒரு மாத காலமாக தனியார் மருத்துவமனையில் நடிகர் கார்த்திக் சபேஷ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி இசையமைப்பாளர் தேவா காலமான நிலையில், அவருடைய சகோதரர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் உயிரிழந்தது அவர்கள் குடும்பத்திற்கு கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News