மனசுதான் கோர்ட்.. அதுக்கு பிறகுதான் இதெல்லாம்.. CM விஜயின் கரூர் பேச்சுக்கு இப்படி ஒரு பதிலா?

மனசுதான் கோர்ட்.. அதுக்கு பிறகுதான் இதெல்லாம்.. CM விஜயின் கரூர் பேச்சுக்கு இப்படி ஒரு பதிலா?

சென்னை: இணையத்துக்குள் நுழைந்தாலே முதலமைச்சர் விஜய் கரூருக்கு சென்று பேசியது தொடர்பான தகவல்கள் தான் பெருமளவு வந்து குவிகிறது. அவரது பேச்சு, அதற்கு ரியாக்‌ஷன்ஸ் என மொத்த இணையமுமே இந்த வீக் எண்டில் இது குறித்து தான் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

அதாவது முதலமைச்சர் விஜய் பேசியதில் கரூர் கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான கருத்துக்கள் பலவும் உண்மைக்கு மாறானவை என்று திமுகவின் ஐ.டி. விங் பக்கத்தில் பதில்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதாவது முதலமைச்சர் விஜய் பேசுகையில், " கரூர் காவல்துறை எங்களிடத்தில் முன்னரே அறிவுறுத்தி இருந்தால் நாங்கள் அந்த நிகழ்ச்சியை மொத்தமாக ரத்து செய்துவிட்டு சென்றிருப்போம். ஆனால் காவல்துறை உள்நோக்கத்துடன் எங்களை அழைத்து வந்து அந்த கோர நாடகத்தை அரங்கேற்றி விட்டார். இது தெரியாமல் நானும் அன்றைக்கு எனது பேச்சைத் தொடங்கும் போது காவல்துறைக்கு நன்றி சொல்லிவிட்டேன்" என்று பேசி இருந்தார்.


விருமாண்டி படக் காட்சி: ஆனால் முதலமைச்சர் விஜய்யின் இந்த பேச்சுக்கு திமுக தரப்பில் பதில்கள் கொடுக்கப்பட்டாலும், இணையவாசிகள் பலருமே தங்களது ஸ்டைலில் பதில்களையும் பதிலடிகளையும் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் இணைய வாசி ஒருவர், உலகநாயகன் கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்த படமான விருமாண்டி படத்தில் நெப்போலியன் ஏற்று நடித்த கதாபாத்திரமான, நல்லாம நாயக்கர் கதாபாத்திரம் நீதி மன்ற வாசலில் விருமாண்டி, கொத்தாளத் தேவர் மற்றும் அவர்களின் சகாக்களை பார்த்து, ஒன்னு மட்டும் மனசுல வெச்சுக்கோ, பொய் ஜெயிச்சிட்டா நினைக்காத... எப்பவுமே சத்யம் மட்டும்தான் ஜெயிக்கும். அதுவரைக்கும் நான் நிம்மதியா தூங்கிடுவேன். உன்னால முடியுமா? மனசுதான்டா கோர்ட்.. அதுக்கு அப்புறம் தான் இதெல்லாம்" என்று நெஞ்சை உலுக்கும் வசனத்தை ஆக்ரோசமாக வீசிச் செல்வார். அந்த காட்சியைப் பகிர்ந்து, தவெகவுக்கு மெயில் அனுப்புவது போல சுட்டிக் காட்டி உள்ளார். இந்த பதிவு இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது.

Netizens Reaction After CM Vijay Karur Speech With Kamalhaasan Virumandi Movie Iconic Scene

தவெகவினர் வரவேற்பு: எனினும் முதலமைச்சர் விஜய்யின் பேச்சு தவெகவினர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் அவரது பேச்சை வெட்டி, இணையத்தில் பல்வேறு வீடியோ துணுக்குகளாக பகிர்ந்து வருகிறார்கள். அவை எல்லாம் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.
 

LATEST News

Trending News