Mandaadi - சூரியின் மண்டாடி.. வந்தது சூப்பர் அப்டேட்.. ரகளையா இருக்கப்போகுது பாஸ்

Mandaadi - சூரியின் மண்டாடி.. வந்தது சூப்பர் அப்டேட்.. ரகளையா இருக்கப்போகுது பாஸ்

சென்னை: காமெடி நடிகராக இருந்த சூரி; கடந்த சில வருடங்களாகவே கதையின் நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த மாமன், கருடன் ஆகிய இரண்டு படங்களில் கருடன் மெகா ஹிட்டாகி வசூலையும் வாரி குவித்தது.இப்போது அவர் மண்டாடி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது.

சினிமாவில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்த சூரிக்கு; வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் பரோட்டா காமெடி காட்சி பெரிய தீனி போட்டது. திரையுலகத்தில் வெல்ல வேண்டும் என்ற அவரது அத்தனை கால பசியும் அந்த பரோட்டாக்கள் மூலம் தீர தொடங்கியது. தொடர்ந்து அடுத்தடுத்து காமெடி ரோல்களில் கலக்கி; விவேக், வடிவேலு ஆகியோரின் இடத்தை பிடிக்க முடியாவிட்டாலும் அவர்கள் அளவுக்கு பிஸியாகவே இருந்தார். அதேசமயம் இவரது காமெடி பல விமர்சனங்களையும் சந்தித்தது நினைவுகூரத்தக்கது.

Soori s Mandaadi Announces Promo Song Release Date New Poster Impresses Fans

வெற்றிமாறன் பட்டறையில் சூரி: இப்படிப்பட்ட சூழலில் வெற்றிமாறனின் இயக்கத்தில் கதையின் நாயகனாக விடுதலை திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை கெட்டியாக பிடித்துக்கொண்டு விடுதலை படத்தில் மிக சிறப்பாக நடித்திருந்தார். படமும் சூப்பர் ஹிட்டானது. சூரியையும் ரசிகர்கள் கதையின் நாயகனாக உடனே ஏற்றுக்கொண்டார்கள். இதனால் உற்சாகமடைந்த சூரி; அடுத்தடுத்து இதே வழியில் பயணிப்பது என்ற முடிவையும் எடுத்தார்.

கருடன் மெகா ஹிட்: விடுதலை படத்துக்கு பிறகு வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி படத்தில் நடித்தார். அந்தப் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டு; சர்வதேச அளவில் பெரிய கவனத்தையும் ஈர்த்தது. இருந்தாலும் வணிக ரீதியாக ஒரு கதையின் நாயகனாக நடித்து வெற்றி பெற முடியவில்லையே என்ற கவலையில் சூரி இருந்தபோதுதான்; துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் நடித்தார்.படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி பல கோடி ரூபாயை வசூலித்து கெத்து காண்பித்தது.

மண்டாடி சூரி: அந்தப் படத்தின் வணிக ரீதியான வெற்றி சூரிக்கு மேற்கொண்டு உற்சாகத்தை கொடுத்தது. கோலிவுட்டில் சூரிக்கென்று தனி மார்க்கெட்டும் உருவானது. அந்த உற்சாகத்தோடு அவர் நடித்த மாமன் படமும் மோசமான வசூல் இல்லை. அதேசமயம் விமர்சன ரீதியாக படம் கழுவி ஊற்றப்பட்டது. இப்போது அவர் மண்டாடி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியிருக்கிறார். கூடிய விரைவில் படம் ரிலீஸாகவிருக்கிறது.

புதிய அப்டேட்: கண்டிப்பாக இந்தப் படம் சூரியின் திரை கரியரில் இன்னொரு மைல் கல்லாக இருக்கும் என்று பலரும் சொல்கிறார்கள். இந்நிலையில் படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, படத்தின் ப்ரோமோ பாடல் வரும் 18ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான போஸ்டரில் ஸ்டைலிஷ் உடையில் சூரி கலக்கலாக இருக்கிறார். மாமன் படத்திலேயே நடனத்தில் ஓரளவு தேறியிருந்தார் அவர்; கண்டிப்பாக இந்தப் பாடலில் ரகளையான நடனத்தை கொடுத்திருப்பார் என்ற எதிர்பார்ப்பையும் போஸ்டர் உருவாக்கியிருக்கிறது.

LATEST News

Trending News