ஜாக்கெட் கூட விடல.. சாய் பல்லவியை விட பேக்கிரவுண்ட் ஆர்ட்டிஸ்ட் சூப்பராம்.. ராமாயணா டிரைலர் சர்ச்சை!
சென்னை: நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் ரன்பீர் கபூர் ஜோடியாக ராமாயணா படத்தில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே அவர் மீதான வன்ம குடோனை சில பாலிவுட் பெயிட் மீடியாக்கள் இறக்கி வருகின்றனர். குறிப்பாக ஒரு சில பிரபல நடிகைகளின் பிஆர் டீம் தான் இந்த வேலையை செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் கிளம்பி உள்ளன.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய தி ஒடிஸி படத்திலும் எலன் ஆஃப் ட்ராய் கதாபாத்திரத்தில் கறுப்பின நடிகை லூபிடா நியோங் நடித்தது குறித்து பெரும் சர்ச்சை வெடித்தது. இன்னமும் வெள்ளை தான் அழகு என்றும் கருப்பு அழகு இல்லை என்கிற இனவெறியை உடைக்கவே கிறிஸ்டோபர் நோலன் அந்த கதாபாத்திரத்துக்கு கறுப்பின நடிகையை தேர்வு செய்துள்ளார் என்று விபரம் அறிந்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், ராமாயணா படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்தே ரன்பீர் கபூர் காஸ்டிங்கை தாண்டி சீதாவாக நடித்துள்ள சாய் பல்லவியை குறிவைத்து மிகப்பெரிய பிஆர் சதி நடந்து வருவது கண்கூடாத் தெரிகிறது.

கடுமையாக விமர்சிக்கப்படும் ராமாயணா டிரைலர்: அமீர்கானை வைத்து தங்கல் படத்தை இயக்கிய இயக்குநர் நிதிஷ் திவார் இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரகுல் ப்ரீத் சிங், சன்னி தியோல் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமாயணா திரைப்படத்தின் டிரைலர் நேற்று அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது. அதை பார்த்த ரசிகர்கள் சிஜி சரியில்லை, யானை பறக்குமா? ரன்பீர் கபூர் செட்டே ஆகவில்லை, யஷ் மட்டுமே படத்தில் மிரட்டப் போகிறார் என ஏகப்பட்ட விமர்சனங்கள் ஒரு படைப்பு வெளியாகும் முன்னே இங்கே குவிகிறது. அதிலும் பாலிவுட் வட்டாரத்தில் அதிகப்படியான வன்மம் நடிகை சாய் பல்லவியை டார்கெட் செய்தே வெளியாகி வருவதை பார்க்க முடிகிறது.

சாய் பல்லவியை விட பேக்கிரவுண்ட் ஆர்ட்டிஸ்ட் சூப்பர்: தனக்கு அருகே இருக்கும் நடிகர்கள் குள்ளமாகவும் கருப்பாகவும் டல் மேக்கப் உடனும் சரியான லைட் வெளிச்சம் இல்லாமலும் பார்த்துக் கொள்வதில் பல நடிகர்களும் நடிகைகளும் கெட்டிக்காரர்கள். ஆனால், அதையெல்லாம் விடுத்து தன்னையும் தனது நடிப்பையும் மட்டுமே நம்பி சீதையாக நடித்துள்ள சாய் பல்லவியின் தைரியம் தான் இந்த போட்டோவில் தெரிகிறது என்றும் அவரை விட அவரது பேக்கிரவுண்ட் ஆர்ட்டிஸ்ட் சூப்பர் என ட்ரோல் செய்பவர்களுக்கு சாய் பல்லவியின் நடிப்புத் திறமையை ட்ரோல் செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.
ஜாக்கெட் வரை விட்டுவைக்கல: த்ரேதா யுகத்தில் ஜாக்கெட் போட்டுட்டா இருந்தாங்க என்றும் சீரியல் நடிகை போல சீதா தேவி இருக்கிறார் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். காந்தாரா படத்தில் ருக்மணி வசந்த் வந்தது போல கவர்ச்சி உடையில் வந்தால் வாயை மூடிக் கொண்டிருப்பார்களோ என்னவோ என சாய் பல்லவி ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சீதா தேவியாக சாய் பல்லவி தனது நடிப்பால் அசத்துகிறாரா? இல்லையா? என படத்தை பார்த்து விமர்சிக்க அனைவருக்கும் உரிமையுண்டு. ஆனால், அவரது தோற்றத்தை மட்டுமே வைத்து ட்ரோல் செய்வது சரியல்ல என்பதே சாய் பல்லவி ரசிகர்களின் கருத்தாக உள்ளது.