Spiderman: Brand New Day திரை விமர்சனம்

Spiderman: Brand New Day திரை விமர்சனம்

ஸ்பைடர் மேன் படங்கள் என்றாலே உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருக்கும். அந்த வகையில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள, ஸ்பைடர்மேன் ப்ராண்ட் நியூ டே படம் ரசிகர்களை கவர்ந்தா? பார்ப்போம்.

Spiderman: Brand New Day திரை விமர்சனம் | Spiderman Brand New Day Movie Review

கதைக்களம்

ஸ்பைடர் மேன் ஆன பீட்டர் பார்க்கர் தன்னை பற்றிய அனைத்து நிகழ்வுகளையும் உலகில் உள்ள எல்லா மக்களிடம் இருந்து மறைத்து புதிய வாழ்க்கையை தொடஙுகிறார், அப்படி இருக்கையில் எப்படியாவது தன் நண்பன், காதலி MJ-க்கு மட்டும் எப்படியாவது தன்னை பற்றிய நினைவுகளை கொண்டு வரவேண்டும் என போராடி வருகிறார்.

Spiderman: Brand New Day திரை விமர்சனம் | Spiderman Brand New Day Movie Review

அதே நேரத்தில் டேமஜ் கண்ட்ரோல் என்ற இடத்தில் அடுத்தடுத்து தாக்குதல் நடக்க, ஒரு இளம் பெண் ஊரையே வசியம் செய்து கூடு விட்டு கூடு பாய்ந்து டேம்ஜ் கண்ட்ரோலை தாக்கி அங்கிருந்து VMAX என்பதை எடுக்க முயற்சிக்கிறார்.

மேலும் MJ-க்கு புதிய காதலன் இருப்பதை அறிந்த பீட்டர் மிக ஆக்ரோஷமாக மாற தன் உடலில் பல மாற்றம் ஏற்படுகிறது. அதை தொடர்ந்து அந்த வசியம் செய்யும் பெண் MJ-யை குறித்து வைத்து பீட்டரை லாக் செய்கிறார்.

 

Spiderman: Brand New Day திரை விமர்சனம் | Spiderman Brand New Day Movie Review

அவர் நினைத்தது போல் VMAX-யை கைபற்ற வர, ஸ்பைடர் மேன் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தி தன் காதலிக்கும் நண்பனுக்கு தான் யார் என்பதை தெரிய படுத்தினாரா? இது தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

பீட்டர் பார்க்கராக டாம் ஹாலண்ட், வழக்கம் போல் தன் துறு துறை நடிப்பால் தூள் கிளப்புகிறார், அதிலும் MJ-வுடன் அவர் தன் காதலை புரிய வைக்க செய்யும் முயற்சிகள், அவரை காப்பாற்ற எந்த எல்லைக்கும் போவேன் என்று செய்யும் சாகசங்கள் என பின்னி பெடல் பெர்ப்பாமன்ஸ்.

 

Spiderman: Brand New Day திரை விமர்சனம் | Spiderman Brand New Day Movie Review

இதை தாண்டி வில்லி கதாபாத்திரத்தில் வரும் Sadie Sink மிரட்டல் பெர்ப்பாமன்ஸ், என்ன கொஞ்சம் நம்ம 7ம் அறிவு டாங்லீயை நினைவு படுத்துகிறார்.

ஹாலிவுட்டில் எல்லோருக்கும் காமிக்ஸ் படித்தவர்களுக்கு இந்த ஜீன் கதாபாத்திரம் அறிமுகம் என்றாலும் நமக்கு 7ம் அறிவு தான் நியாபகம் வருகிறது, சரி, ஸ்பைடர் மேன் படம் எதற்கு போவார்கள், Fun, Fight தானே, அது இருக்கா என கேட்டீர்கள் என்றால், திகட்ட திகட்ட உள்ளது. கூடுதலாக பீட்டர், எம் ஜே காதல் காதல் எமோஷ்னல் காட்சிகள் செம மொமண்ட் ஆக வந்துள்ளது.

 

Spiderman: Brand New Day திரை விமர்சனம் | Spiderman Brand New Day Movie Review

படத்தில் ஜீன் வசியம் செய்யும் காட்சிகள், ஹல்க் உடன் சண்டைக்காட்சி, கிளைமேக்ஸ் நிஞ்சா பைட் என ஸ்டெண்ட் கலக்கியுள்ளனர். அதிலும் கிளைமேக்ஸ் பிரமாண்டம்.

படத்தில் இப்படி பல அட மொமண்ட் இருந்தாலும் அநியாய டெக்னிக்கல் பேச்சு இரண்டாம் பாதியில் சில இடங்களில் சோதிக்கிறது, சாமனிய மக்களுக்கு குழப்பம் தரும் டெக்னிக்கல் சார்ந்த வசனங்கள் இன்னும் புரியும் படி சொல்லியிருக்கலாம்.

 

Spiderman: Brand New Day திரை விமர்சனம் | Spiderman Brand New Day Movie Review

டெக்னிக்கலாக இசை, ஒளிப்பதிவு, சண்டை காட்சி, சிஜி ஒர்க் எல்லாம் பிரமாதம்.

க்ளாப்ஸ்

படத்தின் திரைக்கதை

சண்டைக் காட்சிகள், குறிப்பாக ஹல்க் சண்டை

கிளைமாக்ஸ் ஜீன் உடன் வரும் உரையாடல் காட்சி

காதல் காட்சி

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி கொஞ்சம் டாக்கி போஷன் அதிகம்

மொத்தத்தில் இந்த ஸ்பைடர் மேன் ப்ராண்ட் நியு டே எப்போதும் போல் திரை விருந்து தான்.  

Spiderman: Brand New Day திரை விமர்சனம் | Spiderman Brand New Day Movie Review

LATEST News

Trending News