DC டிரெய்லர் தெறிக்குது.. மாஸ்டர் ரெஃபரன்ஸ் மிரட்டுதே.. ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் எப்படி?

DC டிரெய்லர் தெறிக்குது.. மாஸ்டர் ரெஃபரன்ஸ் மிரட்டுதே.. ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் எப்படி?

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்துள்ள டிசி படத்தின் மிரட்டலான டிரெய்லர் தற்போது வெளியானது. விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரெஃபரன்ஸும் சேர்ந்த இருக்கும் நிலையில், ரசிகர்கள் தளபதி ரசிகர்களும் இந்த டிரெய்லரை கொண்டாடி வருகின்றனர்.

மாநகரம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தான் லோகேஷ் கனகராஜ். கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி விஜய்யின் பிகில் படத்துக்கே போட்டியாக ரிலீஸ் செய்து சாதித்தும் காட்டினார்.

உடனடியாக விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பும் லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி பல ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கும் ஒரு பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பார்சல் செய்தார்.

விஜய்யுடன் செம பாண்ட்: மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய்யுடன் லியோ படத்தின் மூலம் மீண்டும் இணைந்தார். கைதி, விக்ரம் படங்களை தொடர்ந்து லியோ படத்தையும் எல்சியூவுக்குள் கொண்டு வந்தார். முதலமைச்சர் விஜய் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக என்றைக்கும் இருக்கப் போவது லோகி இயக்கிய லியோ தான். சமீபத்தில் வெளியான ஜன நாயகன் படத்திலும் கிளைமேக்ஸில் கேமியோ ரோலில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இப்போ ஹீரோவாக டிசி படத்தின் மூலம் ரசிகர்களை தனது நடிப்பால் மிரட்ட காத்திருக்கிறார்.

டிசி டிரெய்லர் எப்படி இருக்கு?: அருண் மாதேஸ்வரன் படங்கள் என்றாலே டீசர், டிரெய்லர் எல்லாமே மிரட்டலாகவே இருக்கும். ஒவ்வொரு ஃபிரேமையும் அப்படி ரசித்து ரசித்து படமாக்குவார். அதன் அடிப்படையில் தான் கேப்டன் மில்லர் படத்துக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது. டிசி டிரெய்லரிலும் கன்ஸ் அண்ட் ரோஸஸை காட்டிய விதம் தனிக் கவிதை. லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா என லீடு நடிகர்களின் நடிப்பு பக்காவாகவே உள்ளது. டிரெய்லரையும் சிறப்பாக கட் செய்துள்ளனர்.

அனிருத் எனும் சம்பவக்காரன்: ஏற்கனவே டிசி ஆல்பம் அனிருத்துக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள டிரெய்லர் பிஜிஎம்மிலும் மனுஷன் புகுந்து விளையாடி உள்ளார். கண்டிப்பாக இந்த படத்தை ரசிகர்கள் தியேட்டருக்குச் சென்று பார்க்க லோகேஷ் கனகராஜ் ஒரு காரணம் என்றால் அனிருத் இன்னொரு காரணமாக இருப்பார்.

மாஸ்டர் ரெஃபரன்ஸ்: விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனக்ராஜ் காப்பு வைத்து சண்டைக் காட்சியை அமைத்த நிலையில், டிசி படத்திலும் தனது காப்பை வைத்து எதிரிகளை அடித்து துவம்சம் பண்ணும் காட்சிகளுக்கு தற்போது ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 7ம் தேதி டிசி படம் வெளியாக காத்திருக்கிறது. விஜய்யின் ஜன நாயகன் வெளியாகவில்லை என்றால் இந்நேரம் இன்றே டிசி திரைப்படம் வெளியாகி இருக்கும்.

 

LATEST News

Trending News