Jana Nayagan Day 8 BOC: ஜன நாயகன் 8வது நாள் வசூல்.. தளபதி ரேஞ்சுக்கு வசூலாச்சா? என்னதான் நிலவரம்?

Jana Nayagan Day 8 BOC: ஜன நாயகன் 8வது நாள் வசூல்.. தளபதி ரேஞ்சுக்கு வசூலாச்சா? என்னதான் நிலவரம்?

சென்னை: விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான ஜன நாயகன், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் படக்குழு தொடங்கி ரசிகர்கள் பட்டாளம் வரை மொத்தமாக நினைத்த அளவுக்கு வசூல் இல்லை என்பதுதான் தற்போதைய நிலவரமாக உள்ளது என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய், மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி கடந்த 23ஆம் தேதி வெளியான படம் ஜனநாயகன். போன பொங்கலுக்கே ரிலீஸ் ஆக வேண்டிய படம், சென்சார் பிரச்னை காரணமாக ஜூலை 23ஆம் தேதி தான் ரிலீஸ் ஆனது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய்யின் கடைசி படம் எனும்போது மொத்த ரசிகர்கள் பட்டாளம் மட்டுமல்லாமல் மொத்த திரையுலகமுமே அவருக்கு சிறப்பான செண்ட்- ஆஃப் கொடுக்க தயாராக இருந்தது என்றாலும், தீவிர ரசிகர்களால் மிகவும் எமோஷனலாகவே படத்தை வரவேற்றனர்.

Jana Nayagan Box Office Day 8 Vijay s Jana Nayagan Facing Struggles to Reach RS 3OO Crores

வசூல்: இந்நிலையில் படம் வெளியாகி இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகும் நிலையில், முதல் எட்டு நாட்களில் அதாவது, இரண்டாவது வாரத்தின் தொடக்கத்தில் படத்தின் வசூல் பலரையும் சர்ப்ரைஸ் ஆக்கி உள்ளது. சாக் நிக் வலைதளத்தின் தகவலின் அடிப்படையில் எட்டு நாட்களில் உலகம் முழுவதும் 260.25 கோடிகள் வசூலித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதில் எட்டாவது நாளான நேற்று மட்டும் ரூபாய் 3.98 கோடிகள் இந்தியாவில் வசூலித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

Jana Nayagan Box Office Day 8 Vijay s Jana Nayagan Facing Struggles to Reach RS 3OO Crores

தடுமாற்றம்: இந்த வசூல் கணக்கு மொத்த திரையுலகையும் சர்ப்ரைஸில் ஆழ்த்தி உள்ளது. அதாவது, விஜய் போன்ற முன்னணி கதாநாயகரின் படம் அவரது கெரியரில் அதிக வசூலித்த படமாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் படத்தின் வசூலானது நாளுக்கு நாள் திணறிக் கொண்டு இருப்பதால் 300 கோடிகளை படம் வசூலிக்குமா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. படம் இணையத்தில் லீக் ஆனது முக்கிய காரணமாக இருந்தாலும், விஜய் ரசிகர்கள் பலருமே படத்தை தியேட்டரில் வந்து பார்க்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது என்று தியேட்டர் நிர்வாகிகள் பேசி வருகிறார்கள்.

Disclaimer: புதிய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் குறிப்பிட்ட இந்த தளங்களான https://www.sacnilk.com/, https://x.com/taran_adarsh மற்றும் https://x.com/rameshlaus போன்ற அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டது. பிலிமிபீட் தகவல் நோக்கங்களுக்காக இந்த எண்களை குறிப்பிடுகிறது என்றாலும், அவற்றின் துல்லியத்திற்கு பொறுப்பேற்காது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். இவை திரைப்பட வருவாயில் நம்பகமான தரவுகளுக்கு பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தளங்கள், மேலும் அவற்றின் அறிக்கைகளைக் குறிப்பிடுவது ஆன்லைனில் காணப்படும் தகவலை தெரிவிப்பதற்காக மட்டுமே.

LATEST News

Trending News