ரியல் ஏ சர்டிபிகேட் படம் வருது.. டாக்ஸிக் டிரைலர் எப்போ தெரியுமா?.. யஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!

ரியல் ஏ சர்டிபிகேட் படம் வருது.. டாக்ஸிக் டிரைலர் எப்போ தெரியுமா?.. யஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்!

பெங்களூர்: கேவிஎன் தயாரிப்பில் வெளியான விஜய்யின் கடைசி படமனா ஜன நாயகன் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்தாலும் பல ஊர்களில் மக்கள் குழந்தைகளை தியேட்டர்களுக்கு அழைத்துச் சென்றுக் கொண்டு தான் இருக்கின்றனர். சென்னையில் சில இடங்களில் காட்சிகள் அதற்காக புகாரின் அடிப்படையில் நிறுத்தப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின.

ஜன நாயகன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தருவதாக சொல்லிவிட்டு கடைசியில் ஏ சான்றிதழை எதற்காக தணிக்கைக் குழு கொடுத்தது என்பதே புரியாத புதிர் தான் என எச். வினோத்தே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

ஆனால், ஏ சான்றிதழுக்கு ஏற்ற தரமான படமாக கேவிஎன் தயாரிப்பில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படம் இந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், அதன் பிரம்மாண்டமான டிரைலர் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

நள தமயந்தி ஹீரோயினா அவங்க?: சுமார் 6 ஹீரோயின்களை வைத்து யஷ்ஷை 3 வித கெட்டப்புகளில் காட்டியுள்ள இயக்குநர் யார் என்று பார்த்தால் நள தமயந்தி படத்தில் "என்ன இது என்ன இது என்னைக் கொல்வது" என மாதவன் உடன் டூயட் பாடிய நடிகை கீது மோகன் தாஸ் தான். டாக்ஸிக் : ஃபார் கிரோன் அப்ஸ் என பக்கவான அடல்ட் படத்தை ஹாலிவுட்டுக்கு நிகராக உருவாக்கியுள்ளார். படம் தொடர்பான ஒவ்வொரு அறிவிப்பு காட்சிகளும் இணையத்தில் ஏகப்பட்ட விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பி வருகிறது.

டாக்ஸிக் டிரைலர் எப்போ?: இந்த மாதம் ஆகஸ்ட் 26ம் தேதி நம்ம ராக்கி பாய் யஷ் பெரிய சம்பவத்தை பாக்ஸ் ஆபீஸில் செய்யப் போவது உறுதியாகி உள்ளது. காந்தாரா 2 படம் கூட கேஜிஎஃப் 2 தொட்டது போல 1000 கோடி வசூலை தொட முடியாத நிலையில், டாக்ஸிக் தொடும் என எதிர்பார்க்கின்றனர். ஜன நாயகன் படத்தின் மூலம் கேவிஎன் நிறுவனத்துக்கு ஏற்பட்ட லாப சேதாரத்தையும் இந்த படம் சரிகட்டும் என்கின்றனர். வரும் ஆகஸ்ட் 8ம் தேதி பிரம்மாண்ட நிகழ்ச்சியுடன் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LATEST News

Trending News