நடிகையின் உதட்டை கடித்த பெண் ரசிகை.. கேமராக்கள் முன்னாடியே இப்படியா? ஓட்டம் பிடித்த நடிகை!
மும்பை: பொதுவாக ஒருவர் பிரபலமாகிவிட்டாலே அவர்களை சுற்றி பிரச்சனைகளும் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கும். அதிலும் நடிகர், நடிகைகள் என்றால் ரசிகர்களால் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் இன்னும் அதிகம். குறிப்பாக நடிகைகளை பொது இடங்களில் பார்க்கும் சில ரசிகர்கள், எல்லை மீறி செல்ஃபி எடுப்பது, கட்டிப்பிடிப்பது, கைகளைப் பிடிப்பது என தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகின்றனர். அப்படித்தான் பாலிவுட் நடிகை நிகிதா ராவலுக்கு திரைப்பட விழா ஒன்றில் ரசிகர் ஒருவர் முத்தம் கொடுத்து தர்மசங்கடத்த ஏற்படுத்தி உள்ளார்.

உதட்டை கடித்த ரசிகை: நடிகை நிகிதா ராவல் சினிமா விழாவிற்கு வந்து கேமராக்களுக்கு போஸ் கொடுத்தபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது தீவிர ரசிகையான பெண் ஒருவர், நடிகையுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள அவரை அணுகியுள்ளார். பெண் ரசிகை என்பதால் நிகிதாவும் எந்த தயக்கமும் இல்லாமல் அவருடன் செல்ஃபி எடுத்து கொண்டிருக்கிறார். ஆனால், அதன்பிறகுதான் எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. முதலில் நடிகையின் கன்னத்தில் முத்தமிட்ட அந்த ரசிகை, அடுத்ததாக அவரது உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார். அதோடு நிற்காமல், உதட்டை கடித்தபடி தொடர்ந்து முத்தமிட்டுக்கொண்டே இருந்தார், இதனால், அதிர்ச்சி அடைந்த நடிகை நிகிதா ராவல், அந்த ரசிகையை தடுக்க பலமுறை முயற்சி செய்தும், அந்த பெண் ரசிகை விலகவே இல்லை.

எல்லை மீறிய ரசிகை: இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடி வந்து ரசிகையை நடிகையிடம் இருந்து விலக்கியுள்ளனர். அதன் பிறகு நிகிதா ராவல் தனது உதட்டை அப்படியே கையால் வைத்து மறைத்துக்கொண்டு, கேமராக்களின் பார்வையில் இருந்து விலகி வந்து, தனது உதட்டை தொட்டுப் பார்த்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தார். இந் சம்பவத்தால் நடிகை சற்று தர்மசங்கடத்தில் நின்ற காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. பொதுவாக பெண் நடிகைகளிடம் ஆண் ரசிகர்கள் எல்லை மீறி நடந்து கொள்வது போன்ற சம்பவங்களை பார்த்திருப்போம். ஆனால், இங்கு பெண் ரசிகையே இப்படி எல்லை மீறி, அதுவும் அத்தனை கேமராக்கள் இருக்கும் போது இப்படி நடந்துகொண்டது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும், ரசிகர்கள் என்றாலும் பிரபலங்களின் தனிப்பட்ட எல்லையை மதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில், இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.