DC: லோகேஷ் கனகராஜ் Highly paid Action hero-வாக வலம் வருவார்.. தனது ஸ்டைலில் பாராட்டிய பார்த்திபன்

DC: லோகேஷ் கனகராஜ் Highly paid Action hero-வாக வலம் வருவார்.. தனது ஸ்டைலில் பாராட்டிய பார்த்திபன்

சென்னை: இயக்குநராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி, முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது அந்த இயக்குநர் அவதாரத்தை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, கேமராவுக்கு முன்னால் கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள 'DC' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வரும் நிலையில், அவரது நடிப்பு குறித்து திரையுலகைச் சேர்ந்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

'DC' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதில் லோகேஷ் கனகராஜ் தேவதாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி பார்வதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநரின் கையில் ஹீரோ அவதாரம்: அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'DC', காதல், ஆக்‌ஷன் மற்றும் கேங்ஸ்டர் பின்னணியில் நகரும் கதையாக உருவாகியுள்ளது. வழக்கமான ஹீரோ கதாபாத்திரம் போல் இல்லாமல், தேவதாஸ் கதாபாத்திரத்தின் இருண்ட பக்கங்களையும் உணர்வுகளையும் மையப்படுத்தி லோகேஷ் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருந்தது.

இயக்குநராக இருந்தபோது கேமராவுக்கு பின்னால் நின்று ஹீரோக்களை இயக்கிய லோகேஷ், இந்தப் படத்தில் கேமராவுக்கு முன்னால் நின்று அதே ஆக்‌ஷன் களத்தை எதிர்கொண்டிருக்கிறார். குறிப்பாக, அவரது உடல்மொழியும் ஆக்‌ஷன் காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

LATEST News

Trending News

HOT GALLERIES