மல்லாக்கப்படுத்து கால்களை தூக்கி.. சட்டை பட்டனை கழற்றிவிட்டு.. ஃபாலோவர்ஸை கிறங்கடித்த டிடி!

மல்லாக்கப்படுத்து கால்களை தூக்கி.. சட்டை பட்டனை கழற்றிவிட்டு.. ஃபாலோவர்ஸை கிறங்கடித்த டிடி!

சென்னை: சின்னத்திரை உலகில் ரசிகர்களின் மனதை வென்ற முன்னணித் தொகுப்பாளினி என்றால் அது 'டிடி' என்று சொல்லும் அளவிற்கு மக்கள் மனதில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தவர் திவ்யதர்ஷினி. இவரை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக 'டிடி' என்றே அழைத்து வருகின்றனர். திரையுலகில் எந்தவொரு முன்னணி நடிகர், நடிகை பிரபலமாக இருந்தாலும், அவர்களை மிக எளிதாக அணுகி, தனது கலகலப்பான பேச்சால் அவர்களின் மனதை வென்றுவிடக்கூடிய தனித்துவமான திறமை டிடியிடம் உள்ளது.

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி: விஜய் டிவியில் ஒளிபரப்பான 'காபி வித் டிடி' என்ற சூப்பர் ஹிட் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். டிடி தொகுப்பாளினியாக மட்டுமில்லாமல் நள தமயத்தி, பா பாண்டி, காபி வித் காதல் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். விஜய்டிவியின் செல்லப்பிள்ளையாக இருந்த டிடி தற்போது முக்கிய அரசியல் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாக்கள் போன்ற அரிதான மிக முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே தலைகாட்டி வருகிறார். அண்மையில் இவர் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை பிரத்யேகமாக பேட்டி எடுத்திருந்தார். அந்தப் பேட்டி இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் பிரபலம் அடைந்தது.

சமூக வலைதளங்களில் வைரல்: இணையத்தில் எப்போதும் சுறுசுறுப்பாகவும் ஆக்டிவாகவும் இருக்கும் டிடி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கூல் டினிம் அவுட்ஃபிட்டில் படுத்துக்கொண்டு கால்களை உயர்த்தி ஸ்டைலாக போஸ் கொடுத்தும், சட்டையின் பட்டன்களைக் கழற்றிவிட்டு அல்ட்ரா மாடர்ன் அவதாரத்திலும் இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

வயசே ஆகாதா: டிடியின் இந்த அட்டகாசமான மற்றும் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்களை பார்த்த பேன்ஸ் டிடிக்கு மட்டும் வயசே ஆகாதா என்று கேட்டு வருகின்றனர். அவர் பகிர்ந்து இருக்கும் அந்த போட்டோ மீடியாவில் லைக்குகளைக் குவித்து வருகிறது. டிடி இன்ஸ்டாகிராமில் மட்டும் இரண்டு புள்ளி நான்கு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கிறார்.

LATEST News

Trending News