The End of Oak Street: திரை விமர்சனம்

The End of Oak Street: திரை விமர்சனம்

டைனோசர் படங்கள் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியர்வர்கள் வரை கொண்டாடக்கூடிய வகையில் இருக்கும்; அந்த வகையில் ஆன்னே ஹாத்வே நடிப்பில் வெளியாகியுள்ள The End of Oak Street ஹாலிவுட் திரைப்படம் நம்மை கவர்ந்ததா என்று பார்ப்போம் வாங்க.

 

கதைக்களம்

1982ஆம் ஆண்டில் நாவலாசிரியரான டெனிஸ் பிளாட் (ஆன்னே ஹாத்வே) தனது கணவர் கிரேக் பிளாட், மகள் ஆட்ரே மற்றும் மகன் பிரையன் ஆகியோருடன் ஓக் வீதியில் வசித்து வருகிறார். அவருக்கும் அவரது கணவருக்கு இடையே விரிசல் உள்ளதால், இருவரும் விவாகரத்து குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.

இவரது தனது நாவலை தொகுக்க ஹடில்ஸ்டனின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு நாவல் குறித்த விவாதம் நடந்த பின், தன் வீட்டுத் தோட்டத்தில் மர்மமான செடி ஒன்று முளைத்திருப்பதாக ஹடில்ஸ்டன் டெனிஸிடம் காட்டுகிறார். அது இரண்டு நாட்களில் திடீரென இவ்வளவு பெரிதாக வளர்ந்திருப்பதாக அவர் கூற, டெனிஸ் நூலகத்திற்கு சென்று அந்த செடி குறித்த தகவலை தேடுகிறார்.

The End of Oak Street: திரை விமர்சனம் | The End Of Oak Street Movie Review

அப்போது அது 20,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவர டெனிஸ் குழப்பமடைகிறார். மறுநாள் அவரது பக்கத்துக்கு வீட்டின் தோட்டத்தில் அடையாளம் தெரியாத விலங்குகளின் கழிவுக் குவியல் இருப்பது பிரச்சனையாகிறது. அதே நேரத்தில் சூரியப் பிழம்புகளின் செயல்பாடு அதிகரித்துள்ளதாக வானொலி ஒலிபரப்புகள் தெரிவிக்க, ஓக் வீதியை ஒரு பெரிய வெள்ளை ஒளி சூழ்ந்துகொள்கிறது.

அதன் விளைவாக இரவில் மின்சாரம் துண்டிப்பாகிறது, ரேடியோ மற்றும் தொலைபேசி வேலை செய்யவில்லை. மறுநாள் டைனோசர்கள் உள்ளிட்ட விசித்திர உயிரினங்கள் அங்கு மனிதர்களை தாக்குகின்றன. அந்த டைனோசர்கள் எப்படி வந்தன? அவற்றிடம் இருந்து டெனிஸ் தனது குடும்பத்துடன் எப்படி தப்பித்தார்? என்பதே மீதிக்கதை.

The End of Oak Street: திரை விமர்சனம் | The End Of Oak Street Movie Review

படம் பற்றிய அலசல்

It Follows திரைப்படத்தை இயக்கிய டேவிட் ராபர்ட் மிட்செல் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நிதானமாக ஆரம்பிக்கும் திரைக்கதை, சில திகிலான மொமெண்ட்களுடன் வேகமெடுக்கிறது.

டைனோசர் எப்போது என்ட்ரி கொடுக்கும் என்று நம்மை ஒரு கட்டம் வரை இயக்குநர் காத்திருக்க வைக்கிறார். ஓக் வீதிக்குள் டைனோசர்கள் வந்த பின்னர் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் மிரள வைக்கின்றன. கிளைமேக்ஸில் ஹீரோயினின் குடும்பம் எப்படி தப்பித்தது என்பதை காட்டியது செம ஐடியா.

 

The End of Oak Street: திரை விமர்சனம் | The End Of Oak Street Movie Review

விசித்திர உயிரினங்கள் மனிதர்களை வேட்டையாடுவதை இன்னும் இயக்குநர் கட்டியிருக்கலாம்; மாறாக ஹீரோயினின் குடும்பம் மட்டுமே சண்டையிடுவதை காட்சிப்படுத்தியிருக்கிறார். மேலும், பாதி படத்திற்கு மேல் ஹீரோயின் மற்றும் அவரது குடும்பத்தினர் புத்திசாலித்தனமாக கையாள்வதாக காட்டியிருக்கலாம்.

நடிகர்களைப் பொறுத்தவரை ஆன்னே ஹாத்வே படம் முழுக்க கலக்கியிருக்கிறார். எமோஷனல் காட்சிகளில் நெகிழ வைக்கும் அவர், காமெடியிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். அவரது கணவராக நடித்திருக்கும் எவன் மெக்கிரெகோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

The End of Oak Street: திரை விமர்சனம் | The End Of Oak Street Movie Review

மைசி ஸ்டெல்லா, கிறிஸ்டியன் கான்வெரி இருவரும் அக்கா, தம்பி பாசத்தை காட்டும் வகையில் நன்றாக நடித்துள்ளனர். ஸ்டார்பக் என்கிற அவர்கள் வளர்க்கும் நாய் கூட ஒரு காட்சியில் கைத்தட்டலை பெறுகிறது. குழந்தைகளுடன் பார்க்கக்கூடிய படத்தில் உறுத்தலான காட்சி ஒன்று வருவது நெருடல்.

டெக்னிக்கலாக படம் சிறப்பாகவே உள்ளது; குறிப்பாக சவுண்ட்டிங் பிரமாதம். 1980 காலகட்ட அமெரிக்கர்களின் வாழ்க்கை நேர்த்தியாக காட்டப்பட்டுள்ளது. ஜான் அலெக்ராட்டின் படத்தொகுப்பு கச்சிதம். மைக்கேல் கியாச்சினோவின் பின்னணி இசை மிரட்டல்.

The End of Oak Street: திரை விமர்சனம் | The End Of Oak Street Movie Review

க்ளாப்ஸ்

ஆன்னே ஹாத்வேயின் எதார்த்த நடிப்பு

நடிகர்களின் பங்களிப்பு

கிளைமேக்ஸ்

சவுண்ட் எபெக்ட்ஸ்

பல்ப்ஸ்

இரண்டாம் பாதியில் இன்னும் சுவாரஸ்யமாக எதையாவது காட்சிப்படுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் The End of Oak Street விசித்திர உலகமாக மிரள வைக்கிறது. திரை அனுபவத்திற்காக கண்டிப்பாக பார்க்கலாம். 

The End of Oak Street: திரை விமர்சனம் | The End Of Oak Street Movie Review

 

LATEST News

Trending News