கடை திறப்பு விழாக்களில் ஹனி ரோஸ் Vs அன்னா ராஜன்.. கேரளாவை உலுக்கும் கவர்ச்சிப் போட்டி!
கொச்சி: சினிமாவில் ஒரே ஒரு படத்தில் நடித்துப் பிரபலமாகிவிட்டால் போதும், அதன்பிறகு நகைக்கடை திறப்பு விழா, ஜவுளிக்கடை திறப்பு விழா, சினிமா கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடிகைகள் மாஸ் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக கேரளாவில் நடைபெறும் கடை திறப்பு விழாக்களில் நடிகைகளின் பங்களிப்பு எப்போதும் மிக முக்கிய இடத்தை பிடிக்கும்.
நடிகை ஹனி ரோஸ்: கேரளாவில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு லட்சக்கணக்கில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றால், அங்கு முதலில் நினைவுக்கு வரும் ஒரே நடிகை ஹனி ரோஸ் தான். தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடித்த 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தின் மூலம் பான்-இந்திய அளவில் பிரபலமானார்.

அலைமோதும் கூட்டம்: தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிஸியாக இருக்கும் இவர், கடை திறப்பு விழாக்களில் கலந்துகொண்டாலே ரசிகர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். சில நேரங்களில் சங்கடமான சம்பவங்களை எதிர்கொண்டாலும், அதை ஈடுசெய்யும் வகையில் கணிசமான தொகையை சம்பளமாகப் பெற்றுக்கொண்டு தொடர்ந்து இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

ஹனி ரோஸுக்கு டஃப்: இந்நிலையில், கேரளக் கடை திறப்பு விழாக்களில் ஹனி ரோஸின் தனி ஆதிக்கத்திற்குப் போட்டியாகத் தற்போது நடிகை அன்னா ராஜன் களம் இறங்கியுள்ளார். இவர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகறிர். தற்போது இவர், பச்சை நிறப் பாவாடை மற்றும் ஜாக்கெட் அணிந்து கடை திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, மில்லியன் கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் குவித்து வருகின்றன.
சோஷியல் மீடியாவில் வார்: ஒருபுறம் ஹனி ரோஸின் கிளாமரான கடை திறப்பு விழா வீடியோக்கள், மறுபுறம் அன்னா ராஜனின் வைரல் வீடியோக்கள் என மலையாள சமூக வலைதள உலகமே தற்போது திக்குமுக்காடி போயுள்ளது. ஹனி ரோஸின் இடத்தை அன்னா ராஜன் பிடிப்பாரா என நெட்டிசன்கள் மத்தியில் காரசாரமான விவாதமே வெடித்துள்ளது.