நயன், யாஷ் கூட்டணி வெற்றி.. பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் 'டாஃஸிக்'.. 7 நாட்களில் மாஸ் சம்பவம்!

நயன், யாஷ் கூட்டணி வெற்றி.. பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் 'டாஃஸிக்'.. 7 நாட்களில் மாஸ் சம்பவம்!

சென்னை: 'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு ராக்ஸ்டார் யாஷ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம் டாக்ஸிக். நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா என நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக தனது முதல் வாரத்தை கடந்துள்ள நிலையில், வசூலில் தொடர்ந்து புதிய உச்சங்களை தொட்டு கெத்து காட்டி வருகிறது!

டாக்ஸிக் வசூல்: டாக்ஸிக் திரைப்படம் ஆகஸ்ட் 26ந் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இத்திரைப்படம் திங்கள் கிழமையைக் காட்டிலும், செவ்வாய்க்கிழமையான நேற்று வசூலில் 7.2% கூடுதல் வசூலை பெற்றுள்ளது. 7-வது நாளான நேற்று இந்தியாவில் சுமார் ₹8.20 கோடியை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இத்திரைப்படத்தின் இந்திய அளவில் மொத்த வசூல் ₹229.95 கோடியாக உள்ளது. கன்னடத்தில் ரூ1.75 கோடியும், தெலுங்கில் ரூ60 லட்சமும், தமிழில் 20 லட்சம், மலையாளத்தில் ரூ5 லட்சத்தை வசூலித்துள்ளது. லாக்ஸிக் படத்திற்கு இந்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், உலகளவில் இப்படம் ரூ313.55 கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது.

Yash Toxic box office

ரசிகர்கள் கொண்டாட்டம்: பாக்ஸ் ஆபிஸில் ரூ. 300 கோடியை கடந்து படம் மாஸ் காட்டி வந்தாலும், திரை விமர்சகர்களிடம் இருந்து நெட்டீவான விமர்சனங்களையே பெற்று வருகிறது. படத்தின் பிரம்மாண்டமான விஎஃப்எக்ஸ் (VFX), ஒளிப்பதிவு, ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பிரம்மாண்ட செட் அமைப்புகள் திரையரங்கில் பார்க்க வேற லெவல் அனுபவத்தை கொடுத்தாலும், படத்தின் கதையிலும் திரைக்கதையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தில் கதையே இல்லை ஆரம்பம் முதல் முடிவு வரை தொடர்ந்து குண்டு சத்தம், கதை எதை நோக்கி பயணிக்கிறது என்று தெரியவே இல்லை என படம் பார்த்தவர்கள் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தனர். அதே போல டாக்ஸிக் கடும் விமர்சனத்திற்கு உள்ளாவதற்கு முக்கிய காரணம் வசனம் படுமோசம் என கருத்துக்களை சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், யாஷின் அதிரடியான மாஸ் மேஜிக்கால் மட்டுமே தியேட்டரில் இப்படம் தொடர்ந்து நல்ல வசூலை அள்ளி வருகிறது.

Disclaimer: புதிய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் குறிப்பிட்ட இந்த தளங்களான https://www.sacnilk.com/, https://x.com/taran_adarsh மற்றும் https://x.com/rameshlaus போன்ற அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டது. பிலிமிபீட் தகவல் நோக்கங்களுக்காக இந்த எண்களை குறிப்பிடுகிறது என்றாலும், அவற்றின் துல்லியத்திற்கு பொறுப்பேற்காது என்பதை நினைவில் கொள்வது முக்கியம். இவை திரைப்பட வருவாயில் நம்பகமான தரவுகளுக்கு பரவலாக அங்கீகரிக்கப்பட்ட தளங்கள், மேலும் அவற்றின் அறிக்கைகளைக் குறிப்பிடுவது ஆன்லைனில் காணப்படும் தகவலை தெரிவிப்பதற்காக மட்டுமே.

LATEST News

Trending News

HOT GALLERIES