அட கன்றாவி.. லீக்கான அபிராமி வெங்கடாசலத்தின் கவர்ச்சி போட்டோ.. இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் சிக்கிய நடிகை!
சென்னை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி இன்ஸ்டாகிராமில் விதவிதமாக ரீல்ஸ் மற்றும் புகைப்படங்களைப் பதிவிட்டு நடிகைகளாக மாறியவர்கள் பலர் உண்டு. ஆனால், தற்போது வாய்ப்புகளுக்காக எல்லையை மீறிய கவர்ச்சியை காட்டுவதோடு மட்டுமில்லாமல், இன்ஸ்டாகிராமில் உள்ள 'சப்ஸ்கிரிப்ஷன்' (Subscription) வசதியைப் பயன்படுத்தி, கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர்.
தங்கள் சப்ஸ்கிரைபர்களுக்காக ரூ. 299 முதல் ரூ. 16,000 வரை கட்டணம் நிர்ணயித்து, அதற்குள் 18+ ரகசிய கவர்ச்சி படங்களை பதிவிட்டு வரும் நடிகைகளின் வரிசையில், தற்போது பிக் பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாசலம் இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாசலம், தனது இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் பக்கத்தில் பிரத்யேக சப்ஸ்கிரைபர்களுக்காக அதீத கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

லீக்கான போட்டோ : அபிராமி சப்ஸ்கிரைபர்களுக்கு மட்டும் காட்டிய அந்த அதிதீவிரக் கவர்ச்சி புகைப்படங்கள் சில, தற்போது இணையத்தில் லீக் ஆகி சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், சினிமா வாய்ப்பு இல்லை என்றால் பணத்துக்காக இப்படியா அசிங்கமாக எல்லை மீறுவது? என கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் பகுதியில் Super, Gold, Platinum என பல்வேறு பிரிவுகளை வைத்து, 1 முதல் 11 வரையிலான வெவ்வேறு கட்டண நிலைகளில் 18+ கவர்ச்சி உள்ளடக்கங்களை நடிகைகள் வழங்கி வருகின்றனர்.
வயது வரம்பு இல்லை: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டிய இந்தக் கவர்ச்சி பதிவுகளுக்கு இன்ஸ்டாவில் முறையான வயது வரம்பு சரிபார்ப்பு இல்லாததால், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களும் கட்டணம் செலுத்தி இதை பார்க்கும் அவலம் நிலவுகிறது. ஏற்கனவே திருச்சி சாதனா, தர்ஷா குப்தா போன்ற பிரபலங்கள் மீது இதேபோல சப்ஸ்கிரிப்ஷன் மூலம் சிறார்களை சீரழிக்கும் வகையில் கவர்ச்சி காட்டியதாக சேலத்தில் புகாரளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதிரடி நடவடிக்கையாக திருச்சி சாதனாவின் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டது.

மீண்டும் வெடித்த சர்ச்சை: ஏற்கனவே இந்த இன்ஸ்டா சப்ஸ்கிரிப்ஷன் கவர்ச்சி வியாபாரம் தொடர்பாகக் காரசாரமான விவாதங்களும், காவல் துறையின் நடவடிக்கைகளும் பாய்ந்து வரும் சூழலில், தற்போது பிக் பாஸ் அபிராமி வெங்கடாசலத்தின் சப்ஸ்கிரிப்ஷன் போட்டோக்கள் லீக் ஆகியிருப்பது எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியுள்ளது. அபிராமியின் இந்த செயல் குறித்து நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.