இது என்ன கன்றாவி.. படுக்கையறை காட்சிகளில் சித்தார்த் & அதிதி ராவ்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

இது என்ன கன்றாவி.. படுக்கையறை காட்சிகளில் சித்தார்த் & அதிதி ராவ்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பாலிவுட் படங்களில் நடிகைகள் மட்டும்தான் கவர்ச்சியாக நடிப்பார்கள், படுக்கையறை காட்சிகளில் நடிப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தற்போது பாலிவுட் சென்றுள்ள நடிகர் ஒருவரும் அதேபோல் கவர்ச்சியான காட்சிகளில் நடித்து ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறார் சித்தார்த். தற்போது இவர் 'லாஸ்ட் ஸ்டோரீஸ் 3' என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் தற்போது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன.

லஸ்ட் ஸ்டோரீஸ் 3: நடிகர் சித்தார்த்துக்கு பெரிதாக எந்த அறிமுகமும் தேவையில்லை. பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும், குறிப்பிடத்தக்க அளவில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த நடிகராக அவரால் நிலைத்திருக்க முடியவில்லை. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு, அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'சித்தா' படம் மிகபெரிய வரவேற்பை பெற்றது. அதன் பிறகு நடிகை அதிதி ராவ் ஹைதரியுடன் ஏற்பட்ட நட்பு, பின்னர் திருமணம் என சித்தார்த்தின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வரும் சித்தார்த், வெப் தொடர்கள், திரைப்படங்கள் என தொடர்ந்து நடித்து வருகிறார்.

Siddharth Aditi Rao Hydari Lust Stories 3

படுக்கை அறை காட்சி: அந்த வகையில் தற்போது 'லாஸ்ட் ஸ்டோரீஸ் 3' ஆந்தாலஜி திரைப்படத்தில் இயக்குனர் விஷால் பரத்வாஜ் இயக்கிய பகுதியில் சித்தார்த் நடித்திருக்கிறார். இதில் அவருடைய மனைவி அதிதி ராவ் ஹைதரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே 'லாஸ்ட் ஸ்டோரீஸ்' முதல் இரண்டு பாகங்களும் கவனம் பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது பாகமும் வெளியாகியுள்ளது. இதில் படுக்கையறை காட்சிகள் மற்றும் நெருக்கமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சித்தார்த்தும் அதிதி ராவ் ஹைதரியும் இணைந்து நடித்துள்ள சில காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

Siddharth Aditi Rao Hydari Lust Stories 3

நெட்டிசன்ஸ் ட்ரோல்: அதிலும், சித்தார்த் ஒரு காட்சியில் துண்டை கட்டிக்கொண்டு ஒரு விதமான ஆட்டம் போடும் காட்சி இணையத்தில் ட்ரோல் மெட்டீரியலாக மாறியுள்ளது. அந்த காட்சிகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து, இந்த மனுஷன் நல்லாதானே இருந்தாரு... இவருக்கு என்ன ஆச்சு? என்றும், என்ன கண்றாவிடா இது? என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். இன்னும் சிலர் 'தலைநகரம்' படத்தில் வடிவேலு துண்டை கட்டிக்கொண்டு நடனமாடும் காட்சியுடன் சித்தார்த்தின் இந்த காட்சியை ஒப்பிட்டு, அந்த கிளிப்பையும் சேர்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவ்வளவு சிறப்பாக நடிக்கக்கூடிய ஒரு நடிகர் எதற்காக இதுபோன்ற திரைப்படங்களில் நடிக்க வேண்டும்? என்பது போன்ற பல்வேறு கருத்துகளையும் சில ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக மாறியிருப்பது 'லாஸ்ட் ஸ்டோரீஸ் 3' படத்தில் சித்தார்த் நடித்துள்ள இந்த காட்சிகள்தான்.
 

LATEST News

Trending News