Kiran: ஒரு சான்ஸுக்கு ரூ99,999.. விஐபி மெம்பர்ஷிப்.. கல்லா கட்ட பிளான் போட்ட கிரண்!
சென்னை: தமிழ் சினிமாவில் ஜெமினி, அன்பே சிவம், வின்னர் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை கிரண் ரத்தோட். இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், சோஷியல் மீடியாவில் தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு தொடர்ந்து ஹாட் டாப்பிக்காகவே இருக்கிறார்.
நடிகை கிரண்: தற்போது நடிகை கிரண் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள ஒரு பிரத்யேக விளம்பர போஸ்டர் இணையத்தில் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் "KIRAN RATHOD PRIVATE WORLD" (கிரண் ரத்தோடின் பிரைவேட் வேர்ல்ட்) என்ற பெயரில் பிரத்யேக 'VVIP Membership' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். கடற்கரையில் கிளாமராக இருக்கும் தனது புகைப்படத்தை அந்த விளம்பரத்தில் பதிவிட்டு, இந்த விஐபி மெம்பர்ஷிப்பிற்கு ரூ.99,999 அதாவது கிட்டத்தட்ட 1 லட்சம் ரூபாயை கட்டணமாக நிர்ணயித்துள்ளார்.

என்னென்ன சலுகைகள்?: இந்த ரூ.99,999 விஐபி மெம்பர்ஷிப் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளாக கிரண் குறிப்பிட்டுள்ளார். Unlimited Chats: VVIP கம்யூனிட்டிக்குள் தொடர்ந்து சாட்டிங் வசதி. Video-call Opportunities: நேரடியாக வீடியோ காலில் பேசலாம் Exclusive Private Group Access: விஐபி உறுப்பினர்களுக்கான பிரத்யேக பிரைவேட் குரூப் Special Content & Surprises: இதுவரை யாரும் பார்த்திராத ஸ்பெஷல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்த்து ரசிக்கலாம் Personal & Exclusive Connection: என்னுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்பில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என அடுத்தடுத்து சலுகைகளை அள்ளி வீசி இருக்கிறார் கிரண்.

திட்டும் ரசிகர்கள்: மேலும், இது வெறும் பொய் வாக்குறுதிகள் இல்லை... உண்மையான ரசிகர்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரத்யேக பிரைவேட் அனுபவம் என குறிப்பிட்டு, "JOIN KIRAN'S PRIVATE WORLD" என்ற லிங்க்கையும் அவர் பகிர்ந்துள்ளார். ஒரு வீடியோ கால் மற்றும் சாட்டிங்கிற்கு ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் நடிகை கிரணின் இந்த விஐபி ஆபரேஷன், தற்போது சோஷியல் மீடியாவில் நெட்டிசன்களிடையே காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பலர் கிரணை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர்.