எந்த ஆடையணிந்தாலும் இப்படி அப்படின்னு சொல்றாங்க!! நடிகை திஷா பதானி வேதனை..

எந்த ஆடையணிந்தாலும் இப்படி அப்படின்னு சொல்றாங்க!! நடிகை திஷா பதானி வேதனை..

திஷா பதானி

பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை திஷா பதானி. படத்திலும் சரி நிஜ வார்க்கையிலும் சரி எங்கு சென்றாலும் கிளாமர் லுக்கில் செல்வதுதான் வழக்கம். அப்படி சமீபத்தில் அம்பானி இல்லத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது கிளாமர் லுக்கில் வந்ததை திஷா பதானியை கடுமையாக விமர்சித்தனர். இதனையடுத்து தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் திஷா.

எந்த ஆடையணிந்தாலும் இப்படி அப்படின்னு சொல்றாங்க!! நடிகை திஷா பதானி வேதனை.. | Criticize Me No Matter What I Wear Disha Patani

அதில், ஒரு நடிகையாக நான் என் பயணத்தை சரியாக முன்னெடுத்து செல்கிறேன். பொதுவாக பிரபலங்கள் அதுவும் நடிகை என்றால் விமர்சனங்கள் எழுவது வழக்கம் தான், ஆனால் எனக்கு எதிராக ஒரு கூட்டமே இருப்பதாக நான் நினைக்கிறேன்.

என்ன செய்தாலும் விமர்சிப்போரை என்ன என்று சொல்ல? பொதுவாக விமர்சனங்களை என்னைக் கட்டுப்படுத்தாது. விமர்சனங்களை எளிதாக கடந்துவிட்டால் தான் நல்லது. ஆனால் நகர முடியாத அளவுக்கு தனிமனித தாக்குதலாகவே விமர்சனங்கள் இருந்தால் அதை எப்படி எதிர்கொள்வது.

எந்த ஆடையணிந்தாலும் இப்படி அப்படின்னு சொல்றாங்க!! நடிகை திஷா பதானி வேதனை.. | Criticize Me No Matter What I Wear Disha Patani

இப்படி அப்படின்னு

என்ன உடை அணிந்தாலும் அதற்கு ஒரு காரணம் கண்டிபிடித்து விமர்சிக்கிறார்கள். அலங்கார உடையிலும் இப்படி தாக்குதல் செய்பவர்களை திருத்தவே முடியாது. எனக்கு விமர்சனங்கள் புதிதல்ல. நான் யாருடன் பேசினாலும் பழகினாலும் இப்படி அப்படி என்று இடுக்கட்டி பேசி விடுகிறார்கள். எதற்கு எடுத்தாலும் இப்படி குறைகள் பேசி திரிபவர்களை ஒன்றுமே செய்யமுடியாது, அவர்களாகவே திருந்தினால்தான் உண்டு. ஆனால் இதனால் பாதிக்கப்படுவோரின் மனநிலையை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

நல்ல விமர்சனங்களையும் அறிவுரைகளை ஏற்க இங்கு எல்லாருடமே தயார்தான். ஆனால் அறிவுரை என்ற பெயரில் விஷம எண்ணத்துடன் திரிபவர்களை பார்த்தால் தான் பயம் ஏற்படுகிறது. வழக்கம் போலவே இதையும் கடந்து போகிறேன். வலிகளை மனதுக்குள்ளேயே புதைக்கிறேன், எது சரியோ, அது நடக்கட்டும் என்று விரக்தியில் பேசியுள்ளார் திஷா பதானி.

LATEST News

Trending News