Kiran: தினமும் கபி கபி தான்.. ஆட்டத்தை ஆரம்பித்த கிரண்.. திணறும் இன்ஸ்டாகிராம்!

Kiran: தினமும் கபி கபி தான்.. ஆட்டத்தை ஆரம்பித்த கிரண்.. திணறும் இன்ஸ்டாகிராம்!

சென்னை: ஜெமினி, அன்பே சிவம், வில்லன் உள்ளிட்ட பிளாக் பஸ்டர் திரை படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை கவர்ந்த நடிகை கிரண் ரத்தோட், தற்போது சோஷியல் மீடியாவில் எல்லைமீறிய கவர்ச்சி அவதாரத்தை எடுத்து நெட்டிசன்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.

கவர்ச்சி நடிகை: சினிமாவுக்கு வந்த ஆரம்பகாலத்தில் விக்ரம், கமல், அஜீத் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட கிரணால், தமிழ் சினிமாவில் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியாமல் போனது. நடிகை கிரண் கதையின் மீது நம்பிக்கை வைக்காமல், ஓவர் கவர்ச்சியின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்தார். அவர் நடித்து வெற்றி பெற்ற படங்கள் அனைத்திலும் கவர்ச்சிதான் பிரதானமாக இருந்தது. அதனால்தான் அவர் வந்த வேகத்திலேயே வாய்ப்புகளை இழந்து திரையுலகை விட்டு ஒதுங்க நேரிட்டது என சேகுவேரா ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Kiran Rathod Instagram

ரூ.1 லட்சம் விஐபி மெம்பர்ஷிப்: சினிமா வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து, தற்போது தனது இன்ஸ்டாகிராம் மற்றும் சொந்த ஆப் மூலம் கல்லா கட்டி வருகிறார் கிரண். "கிரண் ரத்தோடின் பிரைவேட் வேர்ல்ட்" என்ற பெயரில் பிரத்யேக 'VVIP Membership' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த விஐபி மெம்பர்ஷிப்பிற்கு கட்டணமாக ரூ. 99,999 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த 1 லட்சம் ரூபாய் கொடுத்து மெம்பர்ஷிப் எடுப்பவர்கள் நேரடியாக கிரணுடன் வீடியோ காலில் பேச வாய்ப்பு, இதுவரை யாரும் பார்த்திராத எக்ஸ்க்ளூசிவ் பிரைவேட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், வாடிக்கையாளர்களுடன் மிகவும் நெருக்கமாக தொடர்பில் இருக்கும் சலுகைகள் என சலுகைகளை அள்ளி வீசியுள்ளார்.

தினமும் கபி கபிதான்: இந்த விஐபி மெம்பர்ஷிப் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வரும் கிரண், தன்னுடைய மெம்பர்ஷிப் ஆப்பில் பகிரும் அதீத கிளாமர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியிலும் பதிவிட்டு, அதற்குரிய லிங்கையும் ஷேர் செய்து வருகிறார். இரா பார்க்கும் நெட்டிசன்கள், ரூ.1 லட்சத்துக்கு இதெல்லாம் தேவையா? என அதிர்ச்சியடைந்து கமெண்ட் செய்து வர, கிரணின் இந்த அதிரடி ஆட்டத்தால் இன்ஸ்டாகிராமே திணறி போயுள்ளது.
 

LATEST News

Trending News