ஸ்ட்ராப்லெஸ் டாப்பில் கிளாமர் கிக்.. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திடீரென வந்த கவர்ச்சி மோகம்!

ஸ்ட்ராப்லெஸ் டாப்பில் கிளாமர் கிக்.. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திடீரென வந்த கவர்ச்சி மோகம்!

சென்னை: தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தன் எதார்த்தமான நடிப்பால் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள அல்ட்ரா மாடர்ன் கிளாமர் கிளிக்ஸ்கள் இணையவாசிகளின் கண்ணை பறித்து வருகின்றன.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான ஐஸ்வரா ராஜேஷ், சமீபத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான 'ஓ சுகுமாரி' மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜாவுடன் நடித்த த்ரில்லர் திரைப்படமான 'தீயவர் கொலைகள் நடுங்க' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது பி. ஜெகதீஷ் தயாரிப்பில் அக்கா-தம்பி பாசத்தை மையமாக கொண்டு உருவாகும் 'அண்டர் 18' படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், 'கிங் 100' திரை படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Aishwarya Rajesh instagram

ஸ்ட்ராப்லெஸ் டாப்பில் செம போஸ்: திரையில் பெரும்பாலும் குடும்பப் பாங்கான சேலை கதாபாத்திரங்களில் தோன்றி கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், நிஜ வாழ்க்கையில் செம ஸ்டைலிஷ் ரகமாக வலம் வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தோள்பட்டை தெரியும் தோற்றம் கொண்ட புள்ளி வைக்கப்பட்ட ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் அணிந்து, கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள போட்டோக்களை வெளியிட்டுள்ளார். டார்க் லிப்ஸ்டிக், கில்லர் பார்வை என நாற்காலியில் அமர்ந்தபடி அவர் கொடுத்துள்ள இந்த மாடர்ன் கிளிக்ஸ் ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது.

Aishwarya Rajesh instagram

நம்ம ஐஸ்வர்யா ராஜேஷா இது?: இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், அடடா... நம்ம ஹோம்லி ஐஸ்வர்யா ராஜேஷா இது? செம ஹாட்டா இருக்காங்களே என்றும், கவர்ச்சியிலும் நீங்க கெத்துதான் என்றும் லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்த ஹிட் படங்களை இறக்கி வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த ட்ரெண்டிங் அவதாரம் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

LATEST News

Trending News