ஜெயிலர் 2 திரை விமர்சனம்

ஜெயிலர் 2 திரை விமர்சனம்

Jailer 2 Movie Review: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்ப்போம். ஆனால், அதற்கு முன் ஜெயிலர் கதையை பார்த்துவிட்டு, அதன்பின் ஜெயிலர் 2 விமர்சனத்திற்கும் செல்வோம்.

ஜெயிலர் 1

சிலை கடத்தலில் ஈடுபட்டு வரும் வர்மன், ஓய்வு பெற்ற ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியனின் மகனும் போலீஸ் அதிகாரியுமான அர்ஜுனை கடத்தி கொலை செய்கிறார். தனது மகனின் இறப்பிற்கு காரணமாவர்களை பழிவாங்க மீண்டும் களத்தில் இறங்கும் முத்துவேல் பாண்டியன், வர்மனுக்கு சாவு பயம் என்றால் என்னவென்று காட்டுகிறார்.

ஜெயிலர் 2 திரை விமர்சனம் | Jailer 2 Movie Review

அந்த சமயத்தில், அர்ஜுன் சாகவில்லை, உயிருடன்தான் இருக்கிறான்; அவன் வேண்டும் என்றால், ஆந்திராவில் உள்ள பழங்கால கிரீடத்தை திருடி கொடு என ரஜினியிடம் வர்மன் கேட்கிறார். மகனுக்காக தனது செல்வாக்கை பயன்படுத்தி அந்த கிரீடத்தை எடுக்க ரஜினி முயற்சி செய்கிறார் என நினைத்தால், வர்மனுக்கு ஸ்கெட்ச் போட்டு, தனது மகனும் இதில் கூட்டாளி என்பதை தெரிந்துகொள்கிறார் ரஜினி.

இறுதியாக வர்மனின் கதையை முடித்துவிட்டு, மகனை போலீஸிடம் சரணடைய சொல்கிறார். ஆனால், அர்ஜுன் தனது தந்தை சொன்ன பேச்சை கேட்கவில்லை. இதனால் தனது மகனையே கொன்றுவிடுகிறார் ரஜினி.

 

ஜெயிலர் 2 திரை விமர்சனம் | Jailer 2 Movie Review

வர்மன் இறக்கும்போது, 'இது மிகப்பெரிய நெட்வொர்க்; என்னை கொலை செய்துவிட்டு உன்னால் நிம்மதியா இருக்க முடியாது; என் பின்னால் ஒரு உலகமே இருக்கு ஜெயிலர்' என கூறியிருப்பார். அதே போல், டைகர் முத்துவேல் பாண்டியன் எங்கு விட்டாரோ, அங்கிருந்தே ஜெயிலர் 2 கதை ஆரம்பமாகிறது.

ஜெயிலர் 2 கதைக்களம்

வர்மனை கொலை செய்தது யார்? கடத்தப்பட்ட சிலைகளின் மூன்று கண்டெய்னர்கள் யாரிடம் உள்ளது என்பதை கல்பக் குடும்பத்தினர் (எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவத்தி) வர்மனின் நண்பன் திலீப் (சுராஜ்) மூலம் தேடி வருகிறார்கள்.   

ஜெயிலர் 2 திரை விமர்சனம் | Jailer 2 Movie Review

இவர்களின் தேடல் ஒரு பக்கம் நடக்க, தன்னை சுற்றியும், தன் குடும்பத்தை சுற்றியும் ஏதோ தவறாக நடப்பதை உணரும் டைகர் முத்துவேல் பாண்டியன், தன்னை தேடுபவர்கள் தன் குடும்பத்தை நெருங்குவதற்கு முன், நாம் அவர்களை நெருங்க வேண்டும் என திட்டமிடுகிறார்.

ரஜினியின் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாக நடக்க, ஒரு கட்டத்தில் சுராஜ் இடத்திற்கே சென்றுவிடுகிறார். சுராஜை வைத்து கல்பக் குடும்பத்தை கண்டுபிடித்து, இந்த நெட்வொர்க்கில் இருக்கும் அனைவரையும் முடிக்க வேண்டும் என முடிவு செய்கிறார்.

ஜெயிலர் 2 திரை விமர்சனம் | Jailer 2 Movie Review

ஆனால், ரஜினி நெருங்குவதற்குள் சிவராஜ் குடும்பத்தை எஸ்.ஜே. சூர்யா கடத்தி விடுகிறார். இப்படியொரு சிக்கல் ஏற்பட்டதால், தமிழ்நாட்டிலிருந்து கோவாவிற்கு, அதாவது கல்பக் குடும்பம் இருக்கும் இடத்திற்கு செல்கிறார். சிவராஜ் குடும்பத்தை ரஜினி காப்பாற்றினாரா? இந்த சிக்கலில் இருந்து ரஜினி எப்படி தப்பித்தாரா? மொத்த பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாரா இல்லையா? இதற்கிடையில் அவர் சந்தித்த சவால்கள் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

ரஜினி, ரஜினி, ரஜினி... படத்தில் வரும் பாடல் வரிகள் போல் இன்னைக்கும் என்னைக்கும் ஒரு தலைவன்தான் என்பது போல், படத்தில், தான் தோன்றிய முதல் காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை பட்டையை கிளப்பியுள்ளார் சூப்பர்ஸ்டார்.

பணிவாக பேசுவது, கண் பார்வையில் மாஸ் காட்டுவது, ஸ்டைல், வசனங்களை மாஸாக பேசுவது, ஸ்க்ரீன் பிரசன்ஸ், ஆக்ஷன், எமோஷனல் காட்சிகள் என அனைத்திலும் ரஜினிகாந்த் வேற லெவல். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் எமோஷனல் காட்சியில், தனது கண்களால் வலியை திரையில் காட்டிய விதம் சிறப்பு.

ஜெயிலர் 2 திரை விமர்சனம் | Jailer 2 Movie Review

இயக்குநர் நெல்சன் திலீப்குமார், முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்குமான இணைப்பை சரியாக செய்துள்ளார். அதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். காவாலா பாடல் போன்ற சிறு சிறு விஷயங்களில் டீடைலிங் செய்தது அருமையாக இருந்தது.

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, காட்சிகளை நமக்கு அழகாக காட்டிய விதம், டார்க் ஹ்யூமர் காட்சிகள், மாஸான கேமியோக்கள் என திரைக்கதையை நன்றாக வடிவமைத்துள்ளார்.

முதல் பாதியின் Fun + மாஸ் = என்டர்டைன்மென்ட் என படத்தை கொண்டு சென்ற விதம் சிறப்பு. அதே போல் இரண்டாம் பாதியில் ஆக்ஷன் + எமோஷனல் ட்ராமாவாக எடுத்து சென்ற விதமும் வேற லெவல். ஆனால், படத்தின் நீளத்தை மட்டும் சற்று குறைத்திருக்கலாம். குறிப்பாக இரண்டாம் பாதியில் ஏற்பட்ட தொய்வுக்கு படத்தின் நீளம் காரணமாக அமைகிறது.

 

ஜெயிலர் 2 திரை விமர்சனம் | Jailer 2 Movie Review

வில்லன்களாக வரும் சுராஜ் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார். எஸ். ஜே. சூர்யாவிற்கு இன்னும் சற்று வெயிட்டேஜ் இருந்திருக்கலாம். ஆனாலும், நடிப்பு அரக்கன் நடிப்பு அரக்கம்தான் என்பதை நிரூபித்துவிட்டார். குறிப்பாக ரஜினியின் வீட்டிற்கு சென்ற, அவரை எமோஷனலாக உடைக்கும் காட்சியில், ரஜினியை தாண்டி ஸ்கோர் செய்கிறார். வித்யா பாலன் ரஜினிக்கு எதிராக திமிராகவும், தோரணையோடும் பேசும் விதம் சிறப்பு.

நமோ நாராயணன் + யோகி பாபு + ரஜினிகாந்த் காம்போவில் வந்த நகைச்சுவை காட்சிகள் பிளாஸ்ட். அதிலும் நமோ நாராயணன் வேற லெவல் Fun. மற்ற அனைத்து நடிகர்களும், நடிகைகளும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

ஜெயிலர் 2 திரை விமர்சனம் | Jailer 2 Movie Review

படத்தில் மாஸ் காட்சிகள், எலிவேஷன் காட்சிகள், எமோஷனல் காட்சிகள் என அனைத்திற்கும் தனது பின்னணி இசையின் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார், படத்தின் மற்றொரு ஹீரோ அனிருத். ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

கிராஃபிக்ஸ் இன்னும் கூட நன்றாக இருந்திருக்கலாம், அதில் சற்று கோட்டைவிட்டனர். அதே போல், நிறைய இடங்களில் லாஜிக் மீறல்கள். லாஜிக் இல்லா மேஜிக்தான் ஜெயிலர் என்றாலும் கூட, அதற்கென இப்படியா? என்றுதான் கேட்க தோன்றுகிறது.

பிளஸ் பாயிண்ட்ஸ்

  • சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
  • நெல்சன் திலீப்குமார் இயக்கம் மற்றும் திரைக்கதை
  • நமோ நாராயணன்
  • எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் மற்றும் வித்யா பாலன்
  • மாஸ் எலிவேஷன் காட்சிகள்
  • இடைவேளை
  • அனிருத்தின் பின்னணி இசை
  • எமோஷனல் காட்சிகள்
  • கேமியோக்கள்

மைனஸ் பாயிண்ட்ஸ்

  • லாஜிக் மீறல்கள்
  • படத்தின் நீளம்

மொத்தத்தில், 'ஜெயிலர் 2' தமிழ் சினிமாவின் இரண்டாம் பாகம் படம் சுமார் என்று சொல்வதை தகர்த்தெறிந்து, சூப்பர் என்று சொல்ல வைத்துள்ளது. கடந்த 50 ஆண்டுகள் மட்டுமல்ல, அடுத்த 50 ஆண்டுகள் மட்டுமல்ல, இன்னைக்கும் என்னைக்கும் இந்திய சினிமாவில் மாஸ் என்றால் அது ரஜினிதான். அதற்கு ஜெயிலர் 2-வும் ஒரு சாட்சி.  

ஜெயிலர் 2 திரை விமர்சனம் | Jailer 2 Movie Review

LATEST News

Trending News