கண்ணீர் விட்டவர் இப்போ பிகினியிலா? இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி அட்ராசிட்டி பண்ணும் கெனிஷா!
சென்னை: நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்ததற்கு பாடகி கெனிஷா தான் முக்கிய காரணம் என்ற சர்ச்சை சோஷியல் மீடியாவில் ஓயாமல் வெடித்து கொண்டிருக்கும் வேளையில், தற்போது கெனிஷா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி வீடியோ இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளது.
ரவி மோகனின் தோழி கெனிஷா, தன் மீது சுமத்தப்படும் ஆன்லைன் விமர்சனங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி, ரவி மோகனை விட்டு பிரிவதாகவும், இனி சோஷியல் மீடியாவிலேயே தலைகாட்ட போவதில்லை என்றும் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு விலகினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், கெனிஷா தன் மீது அக்கறை கொண்டவர் என்றும், சமூக வலைதளங்களில் அவரைத் தொடர்ந்து விமர்சித்து புல்லிங் செய்ததால் தன்னிடமிருந்து அவரைப் பிரித்துவிட்டதாகவும் ஆதங்கத்துடன் பேசியிருந்தார். இதனால் இருவரும் பிரிந்துவிட்டனர் என்ற பேச்சு எழுந்தது.

பாடகி கெனிஷா: இந்தச் சூழலில், ரவி மோகன் இயக்கி தயாரிக்கும் ' An Ordinary Man' திரைப்படத்தில் கெனிஷா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவிய நிலையில், ரவி மோகன் தனது படத்தில் கெனிஷாவுக்கு இசையமைக்கும் வாய்ப்பை வழங்கியது எப்படி என்ற கேள்விகளும் இணையத்தில் எழுந்தன. இருவரும் பிரிந்துவிட்டதாக வெளியான பேச்சுகளுக்கு மத்தியில், இந்த படத்தில் கெனிஷா இணைந்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிகினி வாக்: இந்நிலையில், கெனிஷா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடையில், பிகினியில் கூலாக நடந்து வரும் வீடியோ ஒன்றை வெளியீட்டு மாபெரும் கிளாமர் அட்ராசிட்டி செய்துள்ளார். சோஷியல் மீடியாவை விட்டு விலகுவதாக அறிவித்த கெனிஷா, அதற்கு முற்றிலும் மாறாக அத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில் மிகவும் கிளாமரான பிகினி உடையில் வாக் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இதெல்லாம் வெறும் நாடகமா?: ஒருபுறம் ரவி மோகன் இயக்கும் 'An Ordinary Man' படத்தில் இசையமைப்பாளராக மாஸ் ஜாக்பாட் அடித்துள்ள கெனிஷா, மறுபுறம் இன்ஸ்டாகிராமில் பிகினியில் ரவுண்ட் அடிப்பதை பார்த்த நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் செய்து வருகின்றனர். அன்னைக்கு போனை வச்சுட்டு அழுகுற மாதிரி வீடியோ போட்டீங்களேம்மா... இப்போ பிகினியில வாக் கொடுத்து நெட்டிசன்களை வெறுப்பேத்துறீங்களா? என்றும், ரவி மோகனை விட்டுப் பிரிஞ்ச மாதிரி நடிச்சிட்டு படத்துல வாய்ப்பும் வாங்கிட்டு, இப்போ கவர்ச்சி ஆட்டமும் போடுறாங்க என்றும் காட்டமாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.