3 பிள்ளைகளை கட்டிக்கொடுத்துட்டேன்.. இறந்து போயிட்டதா சொல்றாங்க.. ஃபீல் செய்யும் மொட்டை ராஜேந்திரன்

3 பிள்ளைகளை கட்டிக்கொடுத்துட்டேன்.. இறந்து போயிட்டதா சொல்றாங்க.. ஃபீல் செய்யும் மொட்டை ராஜேந்திரன்

சென்னை: திரைத்துறையில் ஃபைட்டராக வாழ்க்கையை தொடங்கி இப்போது நடிகராக இருப்பவர் மொட்டை ராஜேந்திரன். நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்து புகழடைந்த அவர்; காலப்போக்கில் காமெடி ரோல்கள் செய்ய் தொடங்கினார். அதுவும் அவருக்கு கைகொடுத்தது. இந்நிலையில் மொட்டை ராஜேந்திரன் குறித்து காதல் பட நடிகர் சுகுமாரின் முகநூல் பதிவு கவனத்தை ஈர்த்திருக்கிறது.

அவர் தனது முகநூல் பக்கத்தில், " திரையுலகம் அதிர்ச்சி ..நடிகர் மொட்டை ராஜேந்திரன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி.."இப்படி ஒரு செய்தியை நடிகைகளை பற்றி அவதூறு பரபும் நடிகர் வீடியோ போட்டதால் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சலில் இருந்திருக்கிறார் அண்ணன். நேற்று கும்மிடிப்பூண்டியில் பிறந்தநாள் விழா ஒன்றில் சந்திப்பு "என்னன்னே எப்பவுமே உற்சாகமா... வா தலைவா அப்டின்னு வைப் குடோனா கொந்தளிப்பீங்க.." என்றதற்குதான் அண்ணனிடம் இருந்து வந்த பதில் .

Mottai Rajendran Was Mentally Disturbed by Viral News Reveals Kadhal Actor Sugumar

"இல்ல தலைவா நான் குத்துக்கல்லு மாதிரி இருக்கேன் இந்த நியூஸ் போட்டதால் மாறி மாறி போன்.அவருக்கே போன் பண்ணி கேட்டேன் ஏம்ப்பா இப்படி பண்ணினே.. ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்லா நாமெல்லாம் ஒரு ஊருதானே என்றதற்கு".. "எனக்கு ஒரு லிங்க் வந்துச்சி அதான் போட்டேன் என்று அந்த பருப்பு பொறுப்பு இல்லாமல் பதில் சொல்லி மறுப்பு வீடியோ போடுறேன்னு சொல்லியும் இன்னும் போடலியாம்.குழந்தை மாதிரி முகம் வாடினார்.

"விடுங்க தலைவா திருஷ்டி கழிஞ்சுது..இன்னும் நூறு வருஷம் ஆயுசு கெட்டி என்றதும் அவரின் "ஹாஹாஹ" என TM சிரிப்பில் மண்டபம் அதிர்ந்தது. 70 வயதாகும் இந்த இளைஞர் இன்றும் தினமும் காலை 1 மணி நேரம் வீட்டில் இருக்கும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார். தூத்துக்குடி அருணாச்சலம் என்றால் ஸ்டண்ட் துறையில் MGR காலத்தில் பிரபலம். MGR, சிவாஜி அவர்களுக்கெல்லாம் டூப் போட்டவர் இவர் அப்பா. பின்பு அவர் அண்ணன்கள் மூன்று பேர் அதே சண்டையாளராக சேர கவர்ன்மென்ட் வேலை போல நானும் அதிலேயே சேர்ந்துட்டேன் என்று சிரிக்கிறார்.

"அண்ணே நான் கடவுள் படத்துல மிரட்டி விட்டீங்க ஆஹா தமிழுக்கு செம்ம வில்லன் கிடைச்சிட்டார் அப்டின்னு நினைக்கும்போது காமெடி பண்ணிட்டீங்களே".. "இல்லப்பா 77ஆம் வருஷம் பைட்டரா சேர்ந்தேன். 35 வருஷமா இந்த உடம்புல எல்லா லாங்குவேஜ் ஹீரோக்கள் கால் தடம் பதியாத இடமே இல்லை. சுரேஷ்கோபி சார் படத்துல கழிவுநீர் கலக்குற கடல் பகுதியில ஃபாலிங் பண்ண சொன்னாங்க.. அங்க லோக்கல்ல உள்ளவங்களே வானாம்பா ரிஸ்க் அப்டின்னாங்க 1500 ரூவா அதான் ஜம்ப் பண்ணிட்டேன்..

ஆனா அதுக்கப்புறம் முடிலாம் கொட்டி என் கஷ்டம் ஒரு முடிவுக்கு வந்தது.. 15 வருஷமா 100 படம் மேல் நடிச்சு இப்போ மூணு புள்ளைகள கட்டி கொடுத்துட்டு ஆண்டவன் புண்ணியத்துல நல்லா இருக்கேம்பா... என்று மறுபடி vibe ஆனவர்.. வரேன் தலைவா நாளைக்கு சந்தானம் கூட காமெடி பண்ணனும் ha ஹாஹா என்று கிளம்பினார்" என குறிப்பிட்டிருக்கிறார்.

LATEST News

Trending News