பிச்சைக்காரன் 3 ரிலீஸ் எப்போது? விஜய் ஆண்டனி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

பிச்சைக்காரன் 3 ரிலீஸ் எப்போது? விஜய் ஆண்டனி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் வெற்றித் திரைப்படத் தொடரான ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில், ‘பிச்சைக்காரன் 3’ திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் பிச்சைக்காரன் அவதாரத்தில் விஜய் ஆண்டனி!

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து 2023ஆம் ஆண்டு வெளியான ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தையும் விஜய் ஆண்டனியே இயக்கி, கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது மூன்றாம் பாகம் உருவாகவிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இயக்குநர் யார் தெரியுமா?

‘பிச்சைக்காரன் 3’ திரைப்படத்தை ‘மெட்ரோ’, ‘கோடியில் ஒருவன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

2027ஆம் ஆண்டில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் கதை, நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த கூடுதல் அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

விஜய் ஆண்டனியின் இந்த அறிவிப்பு பிச்சைக்காரன் திரைப்படத் தொடரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LATEST News

Trending News