தொகுப்பாளினி அஞ்சனாவிற்கு ஏற்பட்ட பிரச்சனை- போலீஸை நாடிய பிரபலம்

தொகுப்பாளினி அஞ்சனாவிற்கு ஏற்பட்ட பிரச்சனை- போலீஸை நாடிய பிரபலம்

தொகுப்பாளினி நிறைய பேர் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்கள். 

டிடி எல்லாம் 20 வருடங்களுக்கு மேலாக இந்த துறையில் முன்னணியில் உள்ளார். அவரை போல ரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்பட்டு வருபவர் தொகுப்பாளினி அஞ்சனா.

இவர் இசை தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தபோது நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இப்போது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

அஞ்சனாவின் கணவர் ஒரு போன் நம்பரை சமூக வலைதளத்தில் பதிவு செய்து தனது மனைவிக்கு இந்த போன் நம்பரில் இருந்து பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அந்த நபர் மீது சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ள சந்திரன் தமிழ்நாடு போலீசார் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES