தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் 'தி கிரே மேன்' படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா

தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படம் 'தி கிரே மேன்' படத்தின் புதிய அப்டேட் - என்ன தெரியுமா

ஹாலிவுட்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் ‘தி கிரே மேன்’.

அவெஞ்சர்ஸ் infinity வார், அவெஞ்சர்ஸ் End game, கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கி உள்ளனர்.

இதில் தனுஷுடன் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்ற நடிகர் தனுஷ், அங்கு ஒரு மாதம் சண்டை பயிற்சி பெற்று, பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது என அப்டேட் வெளியாகியுள்ளது.

விரைவில் நடிகர் தனுஷ் சென்னை திரும்புவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES