பெரிய ஆளா நீங்க? மூக்குல எல்லாம் புகை விட்றீங்க: 'மாஸ்டர்' பட நடிகரை கிண்டல் செய்த விஜய்!

பெரிய ஆளா நீங்க? மூக்குல எல்லாம் புகை விட்றீங்க: 'மாஸ்டர்' பட நடிகரை கிண்டல் செய்த விஜய்!

’மாஸ்டர்’ படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஒருவரை படப்பிடிப்பின்போது தளபதி விஜய் கிண்டல் செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

’மாஸ்டர்’ திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவரான நடிகர் சாந்தனு ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்தக் இந்த படத்தில் பார் ஒன்றில் உட்கார்ந்து இருக்கும் ஒரு காட்சியில் விஜய் மீது சிகரெட் புகை ஊதுவது போன்ற காட்சி ஒன்று படமாக்கப்பட்டதாகவும், அந்த காட்சியின் படப்பிடிப்பின் போது தான் தவறுதலாக வாய் வழியாக புகை விடுவதற்கு பதில் மூக்கின் வழியாக புகைவிட்டதாகவும், இதனை பார்த்த விஜய், ‘பெரிய ஆளா நீங்க? மூக்குல எல்லாம் புகை விட்றீங்க’ என்று கிண்டல் சென்றதாகவும் அவரது கிண்டலை தான் மிகவும் ரசித்து படப்பிடிப்பு தளத்திலேயே விழுந்து விழுந்து சிரித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னை விஜய் அவர்கள் கிண்டல் செய்ததை பெருமையாக கருதுவதாகவும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் நடிகர் சாந்தனு தற்போது ’முருங்கைக்காய் சிப்ஸ்’ மற்றும் ’ராவண கூட்டம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளதால் இந்த ஆண்டே இந்த இரண்டு படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES