'மாநாடு' படத்துடன் மோதுகிறதா 'விக்ரம் 60'?

'மாநாடு' படத்துடன் மோதுகிறதா 'விக்ரம் 60'?

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாயகி கல்யாணி பிரியதர்ஷன் டப்பிங் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதே ஆயுத பூஜை தினத்தை ‘விக்ரம் 60’ படக்குழுவினரும் குறி வைத்துள்ளதாக கூறப்படுவதால் ‘மாநாடு’ மற்றும் ‘விக்ரம் 60’ திரைப்படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

‘விக்ரம் 60’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜூலை முதல் வாரம் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் மீதி படப்பிடிப்பை ஒரு மாதங்களில் முடித்து விட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோர் இணைந்து நடித்து வரும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார் என்பதும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES