வேற லெவலுக்கு செல்கிறது சூர்யாவின் 'சூரரை போற்று': அதிகாரபூர்வ அறிவிப்பு

வேற லெவலுக்கு செல்கிறது சூர்யாவின் 'சூரரை போற்று': அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவான ’சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனாலும் இந்த படத்தை பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பார்த்து ரசித்தனர் என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சுதா கொங்காராவின் அற்புதமான திரைக்கதை மற்றும் இயக்கம், சூர்யா, அபர்ணாவின் நடிப்பு மற்றும் ஜிவி பிரகாஷின் இசை என படக்குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது ’சூரரைப்போற்று’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் ’சூரரைப்போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா தான் இந்தியில் இயக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் Abundantia என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யா வேடத்தில் நடிக்கும் நடிகர் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது
ஏற்கனவே சூர்யாவின் ’சிங்கம்’ திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இந்த படமும் இந்தியில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES