யாஷிகாவுக்கு அதிர்ச்சி, அமலாபாலுக்கு ஆச்சரியம்: பிரேம்ஜியின் டுவிட்

யாஷிகாவுக்கு அதிர்ச்சி, அமலாபாலுக்கு ஆச்சரியம்: பிரேம்ஜியின் டுவிட்

சமீபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த், எஸ்ஏ சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் புகைப்படம் ஒன்றை பதிவு செய்த நிலையில் அதற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு மீம்ஸ் புகைப்படத்தை நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி பதிவு செய்திருந்தார் என்பதை பார்த்தோம். அவர் பதிவு செய்த மீம்ஸ் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யாஷிகாவின் புகைப்படத்திற்கு அதிர்ச்சியை வெளிப்படுத்தியிருந்த பிரேம்ஜி தற்போது அமலாபால் பதிவுசெய்த புகைப்படத்திற்கு ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் மீம்ஸ் ஒன்றை பதிவு செய்துள்ளார். நடிகை அமலாபால் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.

இந்த புகைப்படத்திற்கு நடிகர் பிரேம்ஜி பதிவு செய்துள்ள ஆச்சரிய மீம்ஸ் கமெண்ட்டை பார்த்த நெட்டிசன்கள் ’சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ளுங்கள் பிரேம்ஜி என்றும், இல்லாவிட்டால் இதேபோன்று நடிகைகளுக்கு தொடர்ச்சியாக கமெண்ட்ஸ் போடுவதிலேயே உங்கள் வாழ்க்கை முடிந்து விடும் என்று அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். இதனை அடுத்து விரைவில் விரைந்து திருமணம் செய்து கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News

HOT GALLERIES