'பூக்களும் நெருப்பும்': உச்சபட்ச கிளாமரில் பூஜா ஹெக்டே!

'பூக்களும் நெருப்பும்': உச்சபட்ச கிளாமரில் பூஜா ஹெக்டே!

மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே, அதன்பின் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையானார் என்பதும் மீண்டும் தற்போது தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் தமிழில் வேறு சில படங்களிலும் நடிப்பதற்காக பூஜா ஹெக்டே, பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பூஜா ஹெக்டேவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் 14 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு புகைப்படமும் வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அவர் உச்சபட்ச கிளாமர் உடையில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். கருப்பு வெள்ளையில் உள்ள இந்த புகைப்படத்திற்கு 8 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் இந்த புகைப்படத்திற்கு நடிகை பூஜா ஹெக்டே ’பூக்களும் நெருப்பும்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார் என்பதும், இந்த புகைப்படத்திற்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ஸ் பதிவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES