பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்: ஆறுதல் தெரிவித்து வரும் பிரபலங்கள்

பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்: ஆறுதல் தெரிவித்து வரும் பிரபலங்கள்

இசைஞானி இளையராஜா இசையில் நடிகர் ஆதி கதாநாயகனாக நடித்து விரைவில் வெளிவர இருக்கும் கிளாப் திரைப்படத்தின் கதாநாயகி ஆக்காங்ஷா சிங்.

பாலிவுட்டில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெளியான முன்னணி மெகா தொடர்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

தொடர்ந்து நடிகை ஆக்காங்ஷா சிங் பத்ரிநாத் கி துல்ஹனியா படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.

தெலுங்கில் வெளியான மல்லி ராவ் படத்தின் மூலம் கதாநாயகியாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமான நடிகை ஆக்காங்ஷா சிங் அடுத்து நானி மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்த தேவதாஸ் திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் இவரின் தந்தை க்யான் பிரகாஷ் சிங் உயிரிழந்துள்ளார்.

தனது தந்தையின் மறைவு குறித்து நடிகை ஆக்காங்ஷா சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக பதிவிட்டுள்ளார். நடிகை ஆக்காங்ஷா சிங்கின் தந்தை மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.  

LATEST News